தமிழ் முறை வேள்வி மற்றும் தமிழ் முறை குடமுழுக்கு என்ற பித்தலாட்டம்!

*தமிழ் முறை வேள்வி மற்றும் தமிழ் முறை குடமுழுக்கு என்ற பித்தலாட்டம்!*

எளிமையாக புரிய வேண்டும் என்பதற்காக கேள்வி – பதில் வடிவில் அடியேன் அறிந்த அளவில் தொகுத்துள்ளேன்!

இந்த பதிவில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்! கேள்விகள் இருப்பின் கேளுங்கள்! அறிந்தளவில் பதில் அளிக்க தயாராக உள்ளேன்!

கே: தமிழ்முறை குடமுழுக்கு
என்பது என்ன?
.
ப: தேவாரம், திருவாசகம் முதலான தமிழ் திருமுறைகளை ஓதி வேள்வி மற்றும் சடங்குகளை செய்யும் முறை!
.
கே: இந்த வழக்கம் எப்போது தோன்றியது?
.
ப: சுமார் 50-60 வருடங்கள் முன்பு,
திராவிட இயக்கம் மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின் உருவான வழக்கம்!
Image result for மறைமலை அடிகள்
கே: இதை செய்பவர்கள் யார்?
.
ப: திராவிட இயக்கம், கிறிஸ்தவ மிஷனரி போன்ற இந்து சமய விரோத கும்பல்களால் மறைமுகமாக இயக்கப்படும் சில மடாதிபதிகள்,
சில தமிழ் இயக்கங்கள்!
.
கே: இவர்களின் நோக்கம்?
.
தனித்தமிழ் என்ற பெயரில் வடமொழி வெறுப்பு, பிராமண வெறுப்பை தூண்டுதல், இந்து மதத்துக்குள் பிரிவினைகள், குழப்பத்தை ஏற்படுத்தி துண்டு துண்டாக உடைத்தல்!
.
கே: உண்மையில் தேவார, திருவாசக தமிழ் திருமுறைகளை ஓதி வேள்வி செய்யலாமா?
.
ப: நிச்சயம் கூடாது! காரணம் திருமுறைகள் இறைவனை போற்றி நாயன்மார்களால் மனம் உருகி பாடப் பட்டவையே தவிர, கிரியைகளை செய்வதற்கு பயன்படும் மந்திரங்கள் அல்ல!
.
கே: அப்படி என்றால் வேள்வி, கும்பாபிஷேகம் போன்றவற்றை
எப்படி செய்ய வேண்டும்?
.
ப: சிவ ஆகமங்கள் கூறும் முறைப்படி செய்ய வேண்டும்!

Image result for sadhasivam

கே: சிவ ஆகமங்கள் என்றால் என்ன?
.
ப: சிவபெருமானால் மனிதர்களாகிய நமக்கு அருளப் பட்ட நூல்கள்!
.
கே: ஆகமங்கள் எதைப்பற்றி கூறுகின்றன?
.
ப: ஆகமங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக (பகுதிகளாக) உள்ளன!
.
ஆகமங்களே கோவில் அமைக்கும் முறை, அதன் அளவுகள், சிலைகள் வைக்கும் முறை, அதன் அளவுகள்,
கும்பாபிஷேகம் செய்யும் முறை, யாகசாலை அமைக்கும் முறை, அதன் வடிவம், அளவு என்று அனைத்தையும் விரிவாக சொல்கின்றன! அவ்வளவு ஏன் கையில் வைத்து பூஜை செய்யும் மணியின் அளவு, அதனை அடிக்கும் முறையை கூட ஆகமங்கள் கூறுகின்றன! ஆகமத்தில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம்!
.
கே: அப்படி என்றால் தேவார திருவாசகம் இவைகளை பற்றி கூறவில்லயா?
.
ப: நிச்சயமாக இல்லை! தேவார திருவாசக, திருமுறைகளில்
இது போன்ற செய் முறைகள் கூறப்படவில்லை!
அவை சிவபெருமானை போற்றி பாடும் துதிப் பாடல்கள்!
.
கே: திருமுறைகளின் பெருமை என்ன?
.
ப: திருமுறைகள் அவற்றை பக்தியுடன் பிழை இல்லாமல் ஓதிய மாத்திரத்தில் பலன் தரும் சக்தி கொண்டவை! ஆனால் வடமொழி மந்திரங்கள் அவற்றை உச்சரித்து, செய்ய வேண்டிய கிரியைகளைகளை
தவறில்லாமல் செய்தால்
மட்டுமே பலன் தரும்!
.
கே: தமிழ் வடமொழியை விட கீழானதா?
.
ப: நிச்சயமாக இல்லை! ஏனெனில், கைலாயத்தில் சிவபெருமானின் கையில் உள்ள உடுக்கையின் ஒரு புறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் பிறந்தன! இறைவன் வடமொழியை பாணினிக்கும், தமிழை அகத்திய முனிவருக்கும் உபதேசித்தார்!
.
அதனால் இரண்டு மொழியும் சமமானது! நமக்கு இரண்டு கண்கள் போன்றவை! சொல்லப் போனால் தமிழே உயர்ந்தது!
.
கே: திருமுறைகளான தேவார திருவாசகம் ஆகியவை வேதத்தை, ஆகமத்தை பற்றி கூறுகிறதா?
.
ப: நிச்சயமாக கூறுகிறது! கூறுவதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் போற்றிப் புகழ்கின்றது!
.
கே: திருமுறைகளை ஓத முதல் அதிகாரம் படைத்தவர்கள் யார்?
.
ப: முறைப்படி பாடாசாலைகளில் குரு மார்க்கமாக தேவார திருவாசகங்களை இசையுடன் கற்ற ஓதுவாமூர்த்திகள்!
.
கே: மற்றவர்கள் திருமுறைகளை ஓதலாமா?
.
ப: நிச்சயமாக ஓதலாம்! சிவ தீக்ஷை பெற்ற ஆண், பெண் அனைவரும், உண்மையான சிவபக்தியும், ஒழுக்கமும் உள்ளவர்கள் அனைவரும் சாதி பேதமின்றி திருமுறைகளை ஓதலாம்! ஆனாலும் ஓதுவா மூர்த்திகளுக்கே கோவிலிலும், மற்ற இடங்களிலும் முன்னுரிமை தர வேண்டும்! அவர்கள் ஓதும் போது மற்றவர்கள் அமைதி காப்பது வேண்டும்!
.
கே: ஓதுவார்கள் பிராமணர்களா?
.
ப: இல்லை! இவர்கள் பெரும்பாலும் சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்! முறைப்படி, தீக்ஷை பெற்றவர்களாக இருப்பார்கள்!
.
கே: ஒதுவா மூர்த்திகளுக்குரிய லட்சணங்கள் என்ன?
.
ப: நல்ல ஒழுக்கம், மாறாத சிவ பக்தி, திருநீறு, உருத்திராட்சம், தேவார திருவாசக திருமுறைகளை பிழை இல்லாமல் சரியான இசையுடன் ஓதும் திறமை ஆகியன!
.
கே: தேவாரம் பாடிய மூவர் யார்? அவர்களின் குலம் என்ன?

Image result for தேவாரம்
.
ப:1.திருநாவுக்கரசர்-சைவ வேளாளர்

Image result for திருநாவுக்கரசர்
2. சுந்தர மூர்த்தி நாயனார்-ஆதிசைவர்

Related image
3. திருஞானசம்பந்தர் –வேத பிராமணர்
Related image
கே: திருவாசகம் பாடியவர் யார்? அவரின் குலம் என்ன?

Image result for திருவாசகம்

ப: மாணிக்கவாசக சுவாமிகள்- அமாத்திய பிராமணர்

Image result for மாணிக்கவாசக சுவாமிகள்
.
கே: திருமுறைகள் என்ற தேவார திருவாசகம் இவைகளின் காலம் என்ன?
.
ப: பக்தி இயக்கம் தோன்றிய காலம்பொயு 5 – 8 ம் நூற்றாண்டு காலம்!

Image result for பக்தி இயக்கம்
.
கே: திருமுறைகளை தொகுக்கச் செய்து அவற்றை கோவிலில் பாடும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் யார்?
Image result for ராஜராஜ சோழன்
ப: பொயு 10 நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னரான ராஜ ராஜ சோழன்!
கே: திருமுறைகளை தொகுத்து வரிசைபடுத்தியவர் யார்?
.
ப: ராஜராஜனின் வேண்டுதலுக்கிணங்க நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்தளித்தார்! இவர் சிவபிராமண வகுப்பை சேர்ந்தவர்!
அந்த பிராமணர் இல்லை என்றால் இன்று நமக்கு தேவாரம் இல்லை!

Related image
கே: திருமுறைகள் எத்தனை பகுதிகளாக உள்ளன?
.
ப: திருமுறைகள் மொத்தம் 12 ஆக வகுக்கப் பட்டுள்ளன!

Image result for திருமுறைகள்
.
கே: திருமுறைகள் கிடைக்கப் பெற்ற 10 ஆம் நூற்றாண்டு முன் வரை ஆலய பூஜைகள் எப்படி நடந்தன?
.
ப: முழுவதும் வேத, ஆகம மந்திரங்கள் ஓதி நடந்தது! ராஜராஜன் காலத்தில் தான் ஒதுவார் என்ற மரபே உருவானது!
.
கே: திருமுறைகளை எப்போது ஓத வேண்டும்?
.
ப: உற்சவம், வேள்வி, பூஜை இவற்றின் நிறைவு நேரத்தில் ஓத வேண்டும்!
.
கே: திருமுறைகளில் கல்யாணம், யாகம், புதுமனை புகுவிழா, பூப்பு நீராட்டு இவை போன்ற செயல்களுக்கு தனித்தனியாக பாடல்கள் உண்டா?
.
ப: நிச்சயமாக இல்லை! சொல்லப் போனால் இந்த மாதிரி கிரியைகளுக்கும் திருமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
.
கே: திருமுறைகளை பயன்படுத்தி யாகத்துக்கு உரிய தெய்வங்களை அழைக்க முடியுமா? கும்பத்தில் நிலை நிறுத்த முடியுமா?
.
ப: நிச்சயமாக முடியாது! ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மூல மந்திரம், பீஜ மந்திரங்கள், பாவனைகள், கிரியைகள் உள்ளன!
அவற்றை ஆகமங்களை வைத்தே செய்ய முடியும்!
.
கே: தமிழ் முறை குடமுழுக்குக்கு இறைவன், இறைவி, மற்ற தேவர்கள்
வருகிறார்களா?
.
ப: நிச்சயமாக இல்லை! வரவே மாட்டார்கள்!
.
கே: தேவார திருவாசக திருமுறைகளை பயன்படுத்தி சிவ ஆகம செய்யப்படும் தமிழ்முறை வழி குடமுழுக்கு செய்தால் என்ன நடக்கும்?
.
ப: சிவத்துரோக செயலாகும்! நாயன்மார்கள், சமய ஆச்சார்யர்கள்,
குருமார்கள் ஆகியோரது வாக்கை மீறிய பாவம் வந்து சேரும்!
குருத்துரோகம் செய்வதாகும்!
.
கே: மேன்மை மிக்கதெய்வத் தமிழாக உள்ள திருமுறைகளின் பெருமையை குறைத்து, அவற்றை கொண்டு வேள்வி செய்பவர்களும், செய்யச் சொல்பவர்களுக்கும் என்ன நடக்கும்?
.
ப: ஆணவத்தால் சாஸ்திரவிரோதமாக திருமுறை புரோகிதம் செய்பவர்களுக்கும், செய்யச் சொல்பவர்களுக்கும் கொடிய நரகம் கிடைக்கும்! அடுத்த பிறப்பு இழிபிறப்பாக அமையும்!
தெய்வ சாபம் ஏற்பட்டு வம்சமே அழிந்து போகும்!
.
கே: கோவில் கும்பாபிஷேகம், ஹோமம், பிரதிஷ்டை இவற்றை யார் செய்ய வேண்டும்?
.
ப: சிவ பிராமணர் என்ற ஆதிசைவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்! அவர்களுக்கே ஆகமங்கள் அதிகாரம் தருகின்றன!
.
கே: ஆதிசைவர் அல்லது சிவபிராமணர் என்பவர்கள் யார்?
Image result for ஆதிசைவர்
ப: சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய ஐந்து ரிஷிகளான பஞ்சரிஷி கோத்திரங்களில் பிறந்த பிராமணர்கள்!
.
கே: ஆதிசைவர்களின் பணி என்ன?
.
உலக நலத்துக்காக சிவாலயத்தில் உள்ள சிவபெருமானுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, பிரதிஷ்டை, உற்சவம், ஹோமம் ஆகிய பரார்த்த பூஜையும், தனக்காக ஆன்மார்த்த பூஜையும் ஆகம முறைப்படி செய்வது இவர்களது பணி!
.
“முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்” என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தர மூர்த்தி நாயனார் குறிப்பிடும் தொகையடியார் வரிசையில் வரும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர்களும் அடங்குவார்கள்!

Image result for திருத்தொண்டர்
கே: இவர்கள் மற்ற எந்த கிரியைகளை செய்வார்கள்?
.
ப: கிராம தெய்வம், காவல் தெய்வம்,
குலதெய்வம், பக்த மூர்த்திகள் ஆகியவற்றிற்கு பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், ஹோமம் ஆகியவற்றை ஆகம முறைப்படி செய்து தருவார்கள்!
.
அந்தந்த கோவிலின் வழக்கப்படி தேவைப் பட்டால் உற்சவமும் செய்து வைப்பார்கள்! மேலும் பல்வேறு குலங்களுக்கு குல குருவாக இருந்தும், மடாதிபதிகளாக இருந்தும், சிஷ்யர்களுக்கு நல் வழிகாட்டியாகவும் சைவ நெறியில் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்!
.
கே: இவர்களை ஆதிசைவர்கள் என்று அழைக்க காரணம் என்ன?
.
ப: சிவபெருமான் கால, தேச, வர்த்தமானங்களை கடந்து அநாதியான காலம் தொட்டு இருப்பவர் என்பதால் அவருக்கு அநாதிசைவர் என்று பெயர்! அந்த அநாதி சைவரிடமிருந்து நேரடியாக தோன்றியவர்கள் என்பதால், இவர்களுக்கு ஆதிசைவர், சிவப்பிராமணர் என்று பெயர் வந்தது!
.
கே: சிவபிராமணருக்கும் மற்ற பிராமணருக்கும் வேறுபாடு உண்டா?
.
ப: நிச்சயம் உண்டு! சிவபிராமணர்கள் சிவபெருமானின் முகங்களில் இருந்து பிறந்தவர்கள்! வேத பிராமணர்கள் பிரம்மனின் நான்கு முகங்களில் இருந்து தோன்றியவர்கள்! இருவரும் வேறு வேறு சாதிகள்!
.
கே: இருவருக்கும் உள்ள மற்ற வேறுபாடுகள் என்ன?
.
ப: வேத பிராமணர்கள் வேத, உபநிஷத்துகளை கற்பார்கள்!
சிவ பிராமணர்கள் வேதத்துடன் சிவாகமங்களையும் கற்பார்கள்!
.
கே: ஆதிசைவர்களுக்கு உரிய லட்சணம் என்ன?
.
ப: மாறாத சிவ பக்தி, நல்ல ஒழுக்கமும் கொண்டவராய், முறைப்படி சிவதீக்ஷை பெற்றவராய், நல்ல ஆகம ஞானம், சாஸ்திர ஞானம் உள்ளவராக, நித்யம் சந்தியானுஷ்டானம், அக்னிகார்யம், ஆன்மார்த்த சிவ பூஜை உடையவராய்,
சிகை, விபூதி, ருத்ராக்ஷம், பூனூல் ஆகியவற்றை உடையவராய், அங்கஹீனம் இல்லாதவராய் இருக்க வேண்டும் என்பது பொதுவாக உள்ள விதி!
.
கே: சிவாலய பூஜையில் கர்ப்ப கிரகத்தில் நுழைந்து பூஜை செய்யும் அதிகாரம் யாருக்கு?
.
ப: அந்தந்த சிவாலயங்களில் பரம்பரையாக பூஜை செய்யும் ஆதிசைவர்களுக்கு மட்டும்!ஏனையோர் பிராமணாராக இருந்தாலும் அர்த்த மண்டபம் தாண்டி செல்ல அதிகாரம் இல்லை!
.
கே: மற்ற ஆலயங்களில் நடைமுறை எப்படி?
.
ப: தமிழகத்தில் பல லட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன! எல்லா கோவில்களிலும் பிராமணர்கள் மட்டும் பூஜை செய்வது இல்லை! அனைத்து ஜாதியிலும் கோவில் பூஜை செய்யும் ஆட்கள் உள்ளனர்!
.
அந்தந்த ஊர்களின் வழக்கப்படி, ஆகமம் சார்ந்தோ, பரம்பரை வழக்கப்படியோ, கிராம வழக்கப் படியோ பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன! எந்த கோவிலாக இருந்தாலும், அந்த கோவிலில் பூஜை செய்யும் நபர் என்ன ஜாதியாக இருந்தாலும், பூஜை செய்பவரை தவிர மற்றவர்கள் கருவறை பிரவேசம் செய்ய அதிகாரம் இல்லை!
.
விதி விலக்காக சில கோவில்களில் அனைவரும் மூலஸ்தானம் சென்று வணங்கும் முறை உள்ளது! அங்கு அனைவரும் கருவறை பிரவேசம் செய்ய முடியும்!
.
கே: ஆதிசைவர்கள் தவிர மற்றவர்கள் சிவாலய பூஜை செய்வது இல்லையா?
.
ப: உண்டு! மடங்களுக்குள் உள்ள சிவன் கோவில்கள், தனக்கென்று தனியாக கட்டிக் கொண்ட கோவில்கள், சில சாதியினரின் சிவன் கோவில்கள் இவற்றில் அதைச் சார்ந்தவர்களே பூஜை செய்யும் முறை உண்டு!
.
கே: பொதுவாக ஒரு கோவிலின் கும்பாபிஷேகம், பிரதிஷ்டை, ஹோமம் ஆகியவற்றை பிற நபர்கள் கொண்டு நடத்தலாமா?
.
ப: நிச்சயமாக கூடாது! சிவபிராமணர்களை கொண்டு, அவரவர் சக்திக்கேற்ப ஆகம விதிப்படி ஆலயம், மூர்த்தி, யாகசாலை, வேதிகை, குண்டம் ஆகியவற்றை அமைத்து சாஸ்திர விரோதம் இல்லாமல் நடத்த வேண்டும்!
.
வைணவ ஆலயமாக இருந்தால் அதன் மரபுக்கேற்ப வைஷ்ணவ பட்டாச்சார்யர்களை கொண்டு நடத்த வேண்டும்! அப்போது தான் அந்த தெய்வத்தின மனங்குளிரும்! ஆலயத்தில் குடியேறி மக்களுக்கு
அருள் புரியும்!
.
கே: அப்படியே ஆதிசைவர்கள் இல்லாமல் தமிழ்முறை ஆட்கள், வேற்று பிராமணர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்தால் என்ன ஆகும்?
.
ப: அந்த கும்பாபிஷேகத்துக்கு உரிய தெய்வத்திற்கு கோபம் ஏற்படும்! பெரும் தோஷம் உண்டாகும்! நடத்துபவர்களுக்கு சிவத்துரோக பாவம் உண்டாகும்!
குலம் அழியும்!
.
கே: ஆகம விரோதமான செயல்கள் கோவிலில் நடந்தால் நாட்டில் என்ன நடக்கும்?
.
ப: தீராத பீடை ஏற்படும்! மழை பெய்யாது! பஞ்சம், பட்டினி ஏற்படும்! நோய்கள் பெருகும்! விவசாயம் அழியும்! போர் வரும்! மொத்தத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பதே இல்லாமல் போகும்!
.
கே: ஆகம விரோத காரியங்கள் கோவிலில் நடந்தால் நாம் என்ன
செய்ய வேண்டும்?
.
ப: முடிந்த அளவு அதை தடுக்க முயல வேண்டும்! முடியாத பட்சத்தில் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்க வேண்டும்! அந்த வேலைகளை செய்பவர்களை மதிக்க கூடாது!அவர்கள் கையால் விபூதி
வாங்குவது கூட பாவம்!
.
கே: இது போன்ற ஆகம விரோத காரியங்களையும், சிவத்துரோக, குருத்துரோக செயல்களை செய்பவர்களும் செய்விப்பவர்களும் இறுதியில் என்ன ஆவார்கள்?

ப: சிவபெருமானை மதிக்காமல் யாகம் செய்த தக்கன் வீரபத்திர மூர்த்தியால் தலை வெட்டப் பட்டு அழிந்ததைப்போல சிவத்துரோக செயலான தமிழ் முறை வேள்வி செய்பவர்கள் இப்போதைக்கு நலமுடன் இருந்தாலும், வரும் நாளில் அழிவார்கள்! அவர்களின் வம்சம், பதவி, புகழ் அனைத்தும் நாசமாகும் என்பது முக்காலமும் சத்தியம்!

  –ரமேஷ் துரைசாமி கவுண்டர்