சித்திரை திருநாள்

 

சித்திரை முதல் தேதி, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது சந்திரசூரியமான மாதம்.

இந்த மேச சங்கிராந்தியில், பாரத வருஷத்தில் சூடு ஜாஸ்தியாகி பூமத்திய ரேகைக்கு வடக்கு நோக்கி, இந்து மகா சமுத்திரத்தில் காற்று பாரத வருஷத்திற்கு உள்ளே நுழையும். அது முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். அதுவே புது வருஷம் (வர்ஷம் என்றால் மழை). அதன் பின் பருவமழை ஆரம்பித்து பாரத வர்ஷம் முழுதும் பெய்யும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக வடகாற்றாக மாறி மார்கழிக்கு பின்பு மழை நின்று பங்குனியில் சுத்தமாக நின்று விடும். அதோடு அவ்வரூசம் முடிந்தது. வெள்ளாமையும் முடியும்.

பங்குனியில் வெயில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென் காற்று வடக்கே வராது. “இதனாலேயே, பங்குனியில் மழை பெய்தால் பரக்கோலம்” பழமொழியும் கொங்கு நாட்டில் உள்ளது.

ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பாரத வருஷத்திற்கே இதுதான் புது வருஷம்.

சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் வேளாளர் பண்டிகை.இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள்.பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதலில் துவங்கிவைப்பர் பிறகு கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த அழகிய கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள்.  கொங்குப் பகுதியில்(ஒரு சில இடங்களை தவிர) அருகிப் போயிருந்தாலும் பண்டைய பாரதத்தின் பிற பகுதிகளிலும்(பாரத வருஷத்தில் தென்கிழக்கு சீன உட்பட கம்போடியா, பிளிப்பன்ஸ், இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்கும்) இன்று வரை நடைபெறுகிறது.

royal ploughing ceremony

ஏன் வெளிநாடுகளில் இந்த வைபவம் நடைபெறுகிறது என்று கேள்வி எனக்கு எழுந்தது?? அதற்கான விடையும் கிடைத்தது??

  • ஜனகர் பொன்னேர் பூட்டும் பொழுது சீதாதேவி வெளியே வந்தார் சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
  • In Valmiki’s Ramayana and its Tamil version Kamban’s Ramavataram, Sita is said to have been discovered in a furrow in a ploughed field, believed to be Sita, and for that reason is regarded as a daughter of Bhūmi Devi (the goddess earth). She was discovered, adopted and brought up by Janaka, king of Mithila and his wife Sunaina

 

  • சித்திரை 1 சித்திர மேழி வைபவம் அது என்ன சித்திர மேழி வைபவம் முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல் சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும் மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும் வைபவம் = திருவிழா என்று பொருள்.
  • மழை புதிதாக ஆரம்பித்து புது வெள்ளாமை செய்ய சித்திரையில் சித்திரைமேழி உழவு அல்லது பொன்னேர் உழவு (பொன் + ஏர்) செய்து ராஜாக்கள் பாரத வருஷத்தில் உழவை ஆரம்பித்து வைப்பர். இன்றும் பாரத வர்ஷத்தின் கிழக்கு நாடுகளான கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் உள்ளது. இன்றும் கொங்கு நாட்டில்(கொல்லிமலை,பொள்ளாச்சி) , சோழதேசம் ஆகியவற்றில் புது மழையை ஒட்டி வேளாளர்கள் /வெள்ளாளர்கள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
  • சித்திரமேழிசபை என்பது சோழராட்சியில் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு. மேழி என்றால் ஏர். உழவுக்கு பயன்படும் ஏர் தான் இந்த அமைப்பின் சின்னம்.இராஜேந்திரசோழன் காலத்தில் அரசாங்கத்தின் வரிவிகிதம் போன்ற சில நடவடிக்கைகளை எதிர்த்து வேளாளர்கள் ஒன்று திரண்டு “சித்திரமேழி பெரியநாட்டார் சபை” என்ற ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டனர். அவர்களின் சின்னம் தான் சித்திரமேழி அலங்கரிக்கப்பட்ட ஏர்கலப்பை என்று பொருள்.
  • அண்ணமார் கதையில் குன்னுடையா கவுண்டர்(எங்கள் முப்பாட்டன் ) பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
  • கிபி 17-ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பு கொண்ட சித்திரமேழி
  • இளம்பூரண அடிகள் ‘கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்றார்.
  • வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த இளங்கோ அடிகள் பொன்னேரைப் பாடியது பொருத்தமே

  Image

  • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் பொ.பி 12-ஆம் நூற்றாண்டு சோழர்கால சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு!

 

Image

சங்க இலக்கியத்தில்:

 

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே” (அகநானூறு -01)

மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவான்.

 

பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி 
நல்மா மேனி தொலைதல் நோக்கி”(அகநானூறு -229)
பொன்னிறம் போன்ற பசலைகள் மேனியிலே படர்ந்தன. புள்ளிகளாகிய தேமல்களையும் வரிகளையும் உடைய நல்ல சிறந்த மேனியின் வனப்பெல்லாம் தொலைந்து போகின்றன.

 

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து,விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்“(சிலப்-135)

மிகுதியாகக் கொடிப்போல் வளர்ந்த நீண்ட அறுகம் புல்லையும்,குவளை மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து தொடுத்த மாலையினைச் சூட்டி,போற்றுவோர் வணங்கி நிற்க,நிலத்தையே பிளக்கும் வண்ணம்,ஏரைப் பூட்டி நிற்கும் உழவர் பாடும் ஏர்மங்கலப் பாடலின் ஒலி ஒருபுறம் கேட்கும்.

 

“கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” – (சிலப்.10:13:2-5)
சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, “செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க” என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார்.குவளை மலர் வேளாளர்கள் சின்னம்/அடையாளம்
“களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்”-
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர,அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

 

பொன் ஏர் மேனி மடந்தையொடு 
வென்வேல் விடலை முன்னிய சுரனே. 
(ஐங்-388)
செறிந்த தொடியையும் பொன் போன்ற அழகிய மேனியையும் உடைய மங்கையுடன்.
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே-(குறுந். 319)
பொன்னையொத்த எனது மேனியின்  நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்
“அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க் கடிகொண்டார் பெருங்கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு“-(கார் நாற்பது)

வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தழையை மாலையாகச் சூடிக்கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.

கொங்கு வேளாளர் சித்திரமேழிக்கொடி

இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு,நாட்டு மாட்டை வைத்து வேளாளர்கள் உழவு செய்ய வேண்டும்.

  • சார்வாரி வருஷ மேஷ சங்கராந்தி வாழ்த்துக்கள்.🙏

மாட்டுப் பொங்கல்/பட்டிநோம்பி

கொங்கனின் பட்டி நோம்பி ….

காலையில பட்டிக்கு காப்பு கட்டி, ஏர் கலப்பைக்கு காப்புக்கட்டி, கட்டைவண்டி, சவாரி வண்டி கழுவி காப்புக்கட்டி, பட்டியில் கல் அடுப்பு கூட்டி …..
ஆடு, மாடு, நாய் ,கோழி முதற்கொண்டு எல்லாம் கழுவி … மாடு, காளை, ஆட்டுகிடா கொம்புகளுக்கு எண்ணெய் -மஞ்சள் பூசி -பெயிண்ட் அடுச்சு. வயிறு நிறைய பசும் தீவனம் கொடுத்து……
சாயங்காலம் … வீட்டில்,… பட்டியில் பொங்க வைக்க தேவையான அனைத்தையும் “மக்கிரிகளில்”(பெரிய மூங்கில் கூடைகள்) எடுத்து கட்டை வண்டியில் வைத்து ஊருக்குள்ள தலைவாசல் வழியாக காடு போகும் ….
பட்டியில் 7 பொங்கல் வரிசையாக வைத்து.. தெப்பக்குளம் தோண்டி மாட்டு சாணம் இட்டு நீர் நிரப்பி, கரும்பு ,மா, வாழை ,மஞ்சள் கொத்து , பூக்கள் கொண்டு தெப்பக்குளம் அழங்கரித்து.. தெப்பக்குளம் சுற்றிலும் “வெங்கச்சான் கல்” சாமிகள் வைத்து “காது ஓலை”. “கருகமணி “, மடிபுடவை , “இரட்டை மைகோதி”, “மாவிளக்கு”, வைத்து .. வந்தவர் எல்லோரும் தெப்பக்குளத்தில் காசு போட்டு, விமர்சையாக கும்பிட்டு…பச்சரிசி மாவில் செய்த மாவிளக்கை சும்மாடு வைத்து, கன்னி பெண் குழைந்தையின் தலையில் வைத்து ,பட்டி சுற்றி, பாடல்கள் பாடி…

“கைதண்ணி பட்டியாரே கைதண்ணி” “அசனம் பட்டியாரே அசனம்” “வாய் பூசு பட்டியாரே வாய்பூசு”..

பட்டியில் உள்ளோர் எல்லாம் கிழக்கு, மேற்கு ,தெற்கு, வடக்கு, என நான்கு திசைகளிலும் நின்று ..அந்தந்த திசைகளில் ஊர் உலகத்துல உள்ள தெய்வங்களை அழைத்து ,விருத்தங்கள் பாடி, விழுந்து கும்புட்டு ….

பிறகு பட்டி சுற்றி தீவர்த்தி காட்டி கன்னுகுட்டி, காளைகளுக்கு, பொங்கல் பழம் ஊட்டி,ஆட்டுக்கு பொங்கல்ஊட்டி,பிறகு பட்டி காவல் தெய்வம் பட்டி நாய்களுக்கு பொங்கல் கொடுக்கவேண்டும் ..

பின் பொங்கல் பந்தி ….. பொங்கல், பருப்பு, நெய், மொச்சைக்கொட்டை குழம்பு, ரசம், தயிர், அரசாணிக்கா,அவரைக்கா, அப்பளம், பச்சமாவு, வாழைபழம்,கரும்பு… என பண்டங்கள் நீளும்….

பின் காளை அல்லது கன்னுக்குட்டி அழைத்து, தெப்பக்குளம் சுற்றி … வெண்கல தட்டு எடுத்து  “இரட்டை மைகோதியால்” தட்டி .. மாடு மிரட்டி.. எதிரில் பிடித்திருக்கும் .. “முடக்கத்தான்” தலையால் செய்த, தலை கையிறை, மிரண்ட காளை அறுத்து ஓடும்போது… காட்டில் மாடு மேய்ப்பவர், கீழ் விழுந்து, மாட்டின் பாதம் கும்பிட்டு, தேங்காய் பழம் எடுப்பார்..
பின் பொங்கல் வைத்த அடுப்பில், பால் வைத்து பொங்கவிட்டு .. பொங்கலை மீண்டும் கட்டைவண்டி ஏற்றி.. அடுப்பில் எரியும் கொள்ளிகட்டையும் எடுத்துக்கொண்டு பொங்கல் வீடு புறப்படும்…..

“பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்! பால் பொங்கி வழியோனும்!!”

தன் தொழிலுக்கும் தான் உயிரென நேசிக்கும் பசுவிற்கும் விழா எடுப்பவன் கொங்கன் மட்டுமே.

பட்டி நோம்பி பொது பண்டிகை அல்ல,காராளர்களின் குடும்ப விழா.பொங்கல் விவசாயம் செய்யும் பிற சாதிகளுக்கும் சரி, இதர சாதிகளுக்குமான நோம்பி அல்ல. , அவர்களது குடிசாதிகளான பதினெட்டு குடிகளுக்கு மட்டுமே..

“கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திருநடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே” ‍
                                         – கவிச்சக்ரவர்த்தி கம்பனின் “ஏர் எழுபது”

ஏறுதழுவுதல்:

மகராதிருநாளின் மறுநாள் ஆயர்கள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (கொல்லேறு தழுவுதல்) விழாவை கொண்டாடினர்.

FB_IMG_1579012126216

FB_IMG_1579012120488.jpg

மாமன் மகளை மணக்கும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது அதே போல தமிழகத்தில் மட்டுமே காணப்படும் ஒரு தெய்வம் நப்பின்னை.இப்படி ஏழு காளைகளையடக்கி நப்பின்னையை மணம் செய்தான் கண்ணன்.

“சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே”–(பிரபந்தம்)

(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)

Related image

மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மதுரை,இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும், தமிழ்நாடு வட மாவட்டங்களில் எருதுகட்டு எனவும் வழங்கப்பட்டுத் தொன்றுதொட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற விழாவாக திகழ்கிறது

வடிவாசலும் பெருமாள் கோவிலும்:

இன்று சமத்துவபொங்கல் ஒரு கும்பல் சுற்றிக்கொண்டு இருக்கிறது அவர்களுக்கு நான் வைக்கும் கெலிவ் இது தான் ஜல்லிக்கட்டில் என் மாடு வாடி வாசல் வழியாக வருகிறது.வடைவாசலாமும் மட்டும்க்கும் என்ன ஸ் சம்பந்தம்?

வாடிவாசலில் இருக்கும் வெள்ளை காவிவர்ணம் எதற்கு இருக்கிறது வடைவாசலில் என் நாமம் போட்டு போட்டு இருக்கிறார்கள்?

Related image

Related image

Related image

ஏறுதழுவுதல் பற்றிய சங்க இலக்கியம்

முல்லைக்கலியின் முதல் ஏழுபாடல்கள் சங்க காலத்தில் எப்படி ஏறுதழுவல் நிகழ்வு நடந்தது, அதில் பங்கெடுத்த காளைகள் எந்த நிறத்தில் இருந்தன, ஆண்கள் அணிந்திருந்த பூக்களின் வகை என்ன, அந்த நிகழ்வை பார்க்க கூடி இருந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்… என்று மிக விரிவாக விவரிக்கின்றது

 

“கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமனையும்
  புல்லாளே ஆய மகள்”–(கலி)

 

கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்- நச்சினார்க்கினியர் உரை.

ஆக இவ்விதிமுறைப்படி நப்பின்னையை மணக்க கண்ணன் ஏறுதழுவவேண்டும். இதன்படி கண்ணன் ஒன்றல்ல, ஏழு ஏறுகளை தழுவி தன் காதலியான நப்பின்னையை மணந்தான்.

 

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால் திருமாமெய் தீண்டலர் –(கலி-102 : 9-10)

 

“சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே”–(நாலாயிர திவ்ய பிரபந்தம்)

(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)

 

“கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.எழுந்தது துகள்;ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;கலங்கினர் பலர்;அவருள்,மலர்மலிபுகழ் எழ,
அலர்மலி மணிபுரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருந்தினான் மன்ற அவ் ஏறு”–(கலி)

 

“காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க் கோதை யாள்” “நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்”(சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை)

 

“இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை”(மலைபடுகடாம்)

 

முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்பொருள்

 

 

எருது

 

காங்கேயம் காளை

எருதினைக் காளை என்றும் அழைக்கின்றனர். உழவுத் தொழிலுக்கு /மாட்டு வண்டி பெரும்பான்மை காளைகளையே பயன்படுத்தியுள்ளனர். நாட்டு நலத்துக்கும் வளத்துக்கும் மிக அடிப்படையான உழவுத் தொழிலுக்கும் பன்னிறக் காளைகள் பயன்பட்டுள்ளன என்பதை

“பல நிற மணிகோத்தென்னப் பன்னிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேயஆள்வினைக் கருங்கால் மள்ளர்”(திருவிளையாடற் புராணம் -திருநாட்டுச் சிறப்பு )

காளையின்  நிறத்தைக் கொண்டு அதனை கரிய/காரி காளை,  பிள்ளை காளை,மயிலைகாளை, சேவலை காளை, கபிலநிற காளை, புகர்நிறுத்து காளை என அழைத்தனர் என்பதை

“மணிவரை மருங்கின் அருவிபோல
அணிவரம்பு அறுத்தவெண்காற் காரியும்
மீன் பூத்து அவிர்வரும்அந்திவான் விசும்புபோல்
கொலைவன் சூடியகுழவித்திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடுஅணிசேயும்
பொருமுரண் முன்பின் புகல்ஏறுபல பெய்து”–(முல்லைக்கலி)

 

 

மாட்டுத் தொழுவம்:

காரி, வெள்ளை முதலிய பல நிறங்களில் அமைந்த ஏறுகள் கொம்புசீவப் பெற்று ஏறு தழுவற் களமாகிய தொழுவினுள் செலுத்தப் படுகின்றன

சீறு அரு முன்பினோன்கணிச்சிபோல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுந்தர் –(கலி-101)

 

சீவுதற்கரிய வலியினையுடைய இறைவனுடைய குந்தாலிப் படைப் போல கூறியதாகக் கொம்புகளைச் சீவி, ஏறுகளைச் சேர தொழுவிடத்தே புகுத்தினர்

 

வானுற ஓங்கிய வயங்குஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல்பழி தீர்ந்த வெள்ளையும்
பொருமுரன் மேம்பட்டபொலம் புனை காரியும்
மிக்கு ஒளிர் தாழ்சடைமேவரும் பிறைநுதல்
முக்கணான் உருவே போல்முரண் முகு குராலும்
மாகடல் கலக்குற மாகொன்றமடங்காப் போர்
வேல்வலான் நிறனே போல்வெருவந்த சேயும் 

 

ஏறு தழுவுதல் என்றிருந்த தமிழர் பண்பாட்டை ஜல்லிக்கட்டாக மாற்றியவர்கள் நாயக்கர்கள் . காளைகளின் கழுத்தில் காசுகளைக் கட்டி ஓடவிட்டு அடக்கி அக்காசுகளை அவிழ்த்தெடுப்பதே ஜல்லிக்கட்டின் உள்ளடக்கம்.

 

பொங்கல்

ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை

திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?எப்படி துவங்கியது ?யார் துவக்கியது ?

பொங்கல் (ஈழத்து வழக்கு: புக்கை)

கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான் கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் மாயோன்.

ராம, ராவண யுத்தத்தின்போது,ஸ்ரீ ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

. மார்கழியின் கடைசி நாளே இந்த விரதத்தின் கடைசி நாள்.

காவிரிபூம்பட்டிணத்தில் இருபத்து எட்டு நாட்கள் ‘மணிமேகலை ” எனும் பெயரில் இந்த விழா கொண்டாடப்பட்டதாக மணிமேகலை இலக்கியத்தில் விழாவறை காதையில் கூறப்பட்டுள்ளது

பழந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ‘ என்னும் தமிழர் மரபில் சிறப்புற்றிருந்த சூரிய வழிபாடு குறித்தும் சூரியக் கடவுளை ‘உச்சிக்கிழான்‘ என்று ஏத்திக் கூறியுள்ளது.

தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்..

 

 

 பொங்கல் வாழ்த்து:

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே!–(ஐங்குறுநூறு)

இந்த பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம்

கங்கைகொண்ட  இராஜேந்திரசோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது எனச் சரித்திரச்செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்

முதல் நாள் போகிப் பண்டிகை:

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது.போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.

மேலும் தகவல்களுக்கு   போகிப் பண்டிகை/காப்புக்கட்டு சொடுக்கவும்

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

சங்கரணம் என்றால் நகர்தல் என்று பொருள். சூரியன் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை செய்யும் தனது தென்முகமான பயணத்தை வடதிசை நோக்கி மாற்றும் தை மாதத்தின் முதல் நாளில்தான் உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது. தை மாதம் மகர ராசிக்குரியது. எனவே, இந்த நாளை மகர சங்கராந்தி என்று குறிப்பிடுகின்றனர்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும்  கரும்பையும்  அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சங்க இலக்கியத்தில் தைப்பொங்கல்:

தைஇத் திங்கள் தண்கயம் படியும்நற்றிணை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்கயம் போல”– ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” –கலித்தொகை

மேலும் தகவல்களுக்கு தைப்பொங்கல் சொடுக்கவும்

 

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்/பட்டிப் பொங்கல் :

அன்று மாடுகள் கட்டும் கட்டுத்தரை சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில்  சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு,கழுத்துக்கட்டி அணிவித்தும் தயார் செய்வார்கள்.

இதன் பின் பசு, காளை, எருமை,ஆடு,நாய்,பூனை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம்,கரும்பு கொடுப்பார்கள்.

‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல் / பூப் பொங்கல் :

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பிறந்தவளே இதை ஆரம்பிக்கவேண்டும் ,அப்பொழுது கண்ணுப்பிடி வைத்தேன், காக்காபிடி வைத்தேன், கூடப்பிறந்த பிறப்பெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், வயிற்றில் பிறந்த பிறப்பு வளமுடன் வாழ வேண்டும் என்று அந்த சூரிய நாராயணனைப் பிரார்த்திக்க வேண்டும்

கணுப்பிடி:

உடன்பிறந்த சகோதரர்களுக்காக பிறந்தவளே செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியாகச் சொல்வதுண்டு.

 

கும்பகோணம் சூரியனார் கோவில்:

கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான்.

கருப்பட்டி பொங்கல்:

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
பால் – 3 கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
உலர் திராட்சை – தேவைக்கு

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

 

நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்

 

 

 

போகிப் பண்டிகை/காப்புக்கட்டு நோம்பி

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் .போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.முன்னோர்களுக்கான பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.போகியன்று, கொங்கு பகுதிகளில் வீட்டின் கூரையில் செருகப்படும் ஆவாரம் பூ, பூலாப்பூ,வேப்பிலை இதை காப்புக்கட்டு என்பார்கள்.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ,பூலாப்பூ(பூளைப்பூ) வைத்து  ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

 

Image result for பூளைப்பூ
பூளைப்பூ

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை கொங்கு வட்டர வழக்கில் பூளாப்பூ என்பர்

வேளாண் பூதம் அணியும் பூக்களில் ஒன்று பூளை பூ

போகத்தை==விளைச்சலை தந்தவன் ,போகி என்றால் இருவரை குறிக்கும்.

  • நாஞ்சில் வலவன்/வாலியோன்/பலராமன்/நாஞ்சிற்பனைக் கொடியோன்
  • இந்திரன்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.வைகறையில்(காலைநேரம்) ’நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும்.

வாலியோன்:

மாயோனும்,வாலியோனும் அன்றைய ம் விவசாய குடிகளின் இரட்டை தெய்வங்கள்

Krishna & Balarama

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட “வேளாண்மைக்கடவுள்” என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் “போகியின்” தெய்வம் அவனே.

Balarama

மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

தமிழகத்தில் உலக்கை தாடியனுக்கு சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன என்பர் சிலம்பு வாயிலாக அறிகிறோம்.பின்வரும் சிலம்பு பாடல் அதை தெளிவாக விளக்குகிறது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”(சிலப்பதிகாரம்)

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும், 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை கூறுவது

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி –(நற்றிணை 32)

மாயோன் – கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவிஅதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து “இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது” என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறதுபலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி.

இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை “நாஞ்சில் வலவன்” எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

காண்க

 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு–(கார் நாற்பது-19)

நாஞ்சில் வலவன் – கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை-பூங்கொம்பினையும், செங்கால் – செவ்விய தாளினையுமுடைய, மரா அம் – வெண்கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி-பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன் கையாள் – முன்னங்கையை யுடையாளின், தோள் – தோள்கள், துணையாவேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று

 

Related image
நாஞ்சில்வலவன்- Balarama with Plough

 

புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப்
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப்
பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச்–(தளவாய்புரச் செப்பேடு)

மேல குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்  பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே,போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே!

இந்திரன்:

போகி என்றால் இந்திரனையும் குறிக்கும்.இந்திரனே மழைக்கு அதிபதி.ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது.

இந்திரா வழிபாட்டின் வீழ்ச்சி:

மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்”–(தொல்காப்பியம்)

போகி பலராமன் விழாவே இந்திரா விழா சித்திரை மாதம் நடந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது

பூம்புகாரில் இந்திர விழாவின்போது

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும்சொரிந்து”–(சிலப்பதிகாரம் )

இந்திரா விழா சமயத்தில் பொங்கல் வைத்த இந்திரனை வழிபட்டு இருக்கலாம் ஆனால் தை மாதம் வரும் பொங்கல் விழா பலராமன்/உலகை தடியனின் விழா தான்.

 

 

 

திருக்கார்த்திகை-கார்த்திகை தீபம்

 

கார்த்திகை விளக்கீடு !

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.. அக்னி ஸ்வரூபமாக போற்றப்படும் சிவனுக்கும், சிவ அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம்.பொதுவாக கார்த்திகை மாதத்தில் இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது.கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’  போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம்

அறிவியல் கரணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து கார்த்திகை தீபத்திருநாள் கொண்டபப்படுகிறது.மழைக்காலங்களில் வரும் தோற்று கிருமிகளை அன்றைக்கே களைந்து குழந்தைகள் பெரியோர்களை காக்கும் ஒரு நுட்பம்  இந்த தீபத்திருநாள் .காற்றில் உள்ள நுண்ணிய கிருமிகளை சொக்கப்பனை அல்லது மாவொளி  நெருப்பு பொறிகள்  அழிப்புது உண்மை.இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் இதை ஈராயிரம் ஆண்டுகளுக்காக கடைபிடிக்கிறாரகள்.

சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டில் கார்த்திகை பற்றி விளக்கம்

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்:

  1. தெறுகால்
  2. தேள்
  3. விருச்சிகம்

கார்த்திகை நாளைக்குறிக்கும்சொற்கள்:

  1. அங்கி
  2. அளக்கர்
  3. அளகு
  4. அறுவாய்
  5. ஆரல்
  6. இறால்
  7. எரிநாள்
  8. நாவிதன்

அறுமுகனும் தீபத்திருநாளும்:

சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.

கார்த்திகை தீபா திருநாள் மூன்று நாள் கோலாகலமாக நடக்கும் , ஊரே ஒளியால் மிளிரும். பெண்கள் குழந்தைகள் கும்மி வட்டமாக அடித்து பாடல்கள் படுவார்கள் வட்டமாக

  1. பெரிய கார்த்திகை
  2. நாட்டுக் கார்த்திகை
  3. கொல்லைக் கார்த்திகை

பெரிய கார்த்திகை:

மலைகளில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை   I.e திருவண்ணமலை , பழனி

நாட்டுக் கார்த்திகை:

நீர்நிலகைளில் , கோவில்களில் தீபம் ஏற்றுவது நாட்டு கார்த்திகை. இது பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவது.இந்த நாட்டு கார்த்திகை நாளில் கொங்கர்கள் தலைமுறை தலைமுறையாக  தங்கள் குலதெய்வ கோவில்களில் விளக்கு ஏற்றுவார்கள் .

கொல்லைக் கார்த்திகை:

கழனிகளில்( வயல்வெளிகளில்) குப்பைமேட்டில் விளக்கு ஏற்றுவது கொல்லை கார்த்திகை இது தீபத்தின் மூன்றம் நாள்.இந்த மூன்றம் நாளில் மக்கள் சொக்கபானை கொளுத்துவார்கள்.

Image result for சொக்கப்பனை
சொக்கப்பனை
சொக்கப்பனை

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் நடுவில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அவர்களின் அகந்தையை போக்குவதற்காக எம்பெருமான் ஈசன், திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடிவருகிறோம்.

திருவண்ணாமலை தீப திருவிழா

                                       ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

 

அருணாசலபுராணம் :

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.

`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார்

 

பெரியபுராணம்:

 

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும் தழல் பிழம்பாய் தோன்றியத தெளிந்தார்

சங்க இலக்கியம் கூறும் கார்த்திகை தீபம்

  1. தேவாரம்
  2. நெடுநல்வாடை
  3. நற்றிணை
  4. அகநானூறு
  5. தேவாரம்
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. சீவகசிந்தாமணி
  9. நற்றிணை
  10. அகநானூறு
  11. முத்தொள்ளாயிரம்
  12. மதுரைக்காஞ்சி
  13. பட்டினப்பாலை
  14. பரிபாடல்
  15. ஐங்குறுநுாறு

 

திருஞானசம்பந்தர் தேவாரம்:

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

வளை – வளையல். மறுகு – தெரு. வண்மை – தெருவினர் கொடைவளம். துளக்கு – அசைவு. தளர்வு, வருத்தம். இல் – இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து – சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க
  • பண்:சீகாமரம்
  • பாடல் எண் :3
  • பாடியவர் :திருஞான சம்பந்தர்
  • தலம்: திருமயிலாப்பூர்

 

நெடுநல்வாடை:

செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்வித ஒவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெந் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் துாஉய்க் கைதொழுது(பாடல் அடி.40 – 42)

ஈர்ந்திரி – நெய்யால் நனைந்த திரி. இரும்பு செய் விளக்கு – தகளி. இதன் வழி அக்கால மக்கள் தெய்வ பக்தியுடன் விளங்கியதை நாம் அறியலாம்

கார் நாற்பது:

நலம் மிகு கார்த்திகை நாட்டவரிட்ட

–பொய்கையார்

களவழி நாற்பது:

கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே

 

சீவகசிந்தாமணி

குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன

தொல்காப்பியத்தில்

வேலை நோக்கிய விளக்குநிலையும் – வேலினைக் குறித்த விளக்கு நிலையும்.
நோக்குதலாவது , விளக்கு ஏதுவாக வேவின் வெற்றியைக் காட்டுத

  • பாடல் எண் :14
  • பாடியவர் :தொல்காப்பியர்
  • உரை :இளம்பூரணர்

நற்றிணை:

சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்களில் நற்றிணை சிறப்பான ஒரு தொகுப்பு. அதில் வரும் 58வது பாடலை முதுகூற்றனார் என்பவர் எழுதியுள்ளார்  அப்பாடலில் தீபத்தைப் பற்றினக் குறிப்பு உள்ளது.

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்  
ஓடுதேர் நுண் நுகம் நுழைந்த மாவே

  • பாடல் எண் :நற்றிணை 58 
  • பாடியவர் :முதுகூற்றனார்
  • திணை:நெய்தற் திணை

 

English version  of Natrinai  poem

May the horses hitched to the chariot
of the lord of the cold shores with tall
waves, suffer beating,
like the sparrows painted on the eyes
of sweet-toned drums hanging on the
shoulders of very wealthy children
wearing gold jewels,
that are hit with drumsticks!

They caused us to return with sad
hearts and exhausted bodies, at this
helpless evening time,
when delicate dew drops fall, drums
and white conch shells of Veerai’s king
Veliyan Thithan are sounded, and when
rows of lamps are lit.

Meanings:  பெரு முது செல்வர் – very rich people, பொன்னுடைப் புதல்வர் – gold jewels wearing sons, சிறு தோள் கோத்த – hung on their small shoulders, செவ்வரி – lovely sounds, பறையின் – of the drums, கண் அகத்து – on their eyes, எழுதிய – drawn, குரீஇப் போல – like the sparrows (குரீஇ – சொல்லிசை அளபெடை), கோல் கொண்டு – with drum sticks, அலைப்ப – to be hit, படீஇயர் – let them suffer (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், expletives, வீரை வேண்மான் வெளியன் தித்தன் – Vēlir king Veliyan Thithan of Veerai, முரசு முதல் – with drums and others, கொளீஇய – lit (சொல்லிசை அளபெடை), மாலை விளக்கின் – with the rows of lamps,  வெண்கோடு – white conch shells, இயம்ப – creating sounds, நுண் பனி அரும்ப – as delicate dew drops fall, கையற வந்த பொழுதொடு – at the helpless time, மெய் சோர்ந்து – with tired bodies, with exhausted bodies, அவல நெஞ்சினம் – we are of sad hearts, பெயர – to move, உயர் திரை – tall waves, நீடு நீர் – abundant water, பனித் துறைச் சேர்ப்பன் – the lord of the cold shores, ஓடு தேர் – fast chariot, நுண் நுகம் – fine yoke, நுழைந்த மாவே – the horses that entered the yoke, the horses that got tied to the yoke (ஏ – அசை நிலை, an expletive)

வெளியன் தித்தன்

உறையூர்த் தித்தன் என்று சங்க. நூல்கள் கூறுவது கொண்டு, வேளிர் குலத்தவனான

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

வெளியன் என்பது கொங்கு வேளாள கவுண்டர்கள் குலங்களில்( கோத்திரங்களில்) ஒன்று,தித்தன் என்பது இவன் தந்தை பெயர்.

Tittan’s son Tittan Veliyan is his son Veliyan. At that time, the name of the father is referred to as the Tittan Veliyan .Veliyan is the Gothra (Kootam) name of kongu velala gounder community one of the largest ethnic community in Tamilnadu

அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும்பெயர்க்கு உருகியாங்கு

வீரை என்னும் ஊரில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது. வேளிர்குடிப் போராளிகள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவ்வூர் அரசன் வெளியன் தித்தன். இவன் உப்பளங்களில் பணியாற்றுவோருக்கு இரவில் உதவும் வகையில் மாலை நேரத்தில் முரசை அகலாகக் கொண்டு விளக்கேற்றி வைத்தான்

வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு

பாடல் எண் :நற்றிணை 58
பாடியவர் :முதுகூற்றனார்
திணை:நெய்தற் திணை

எம்பெருமான் ஈசனை அக்னி  வழிபடுவதே இதன் அர்த்தமாகும். இதனை உணர்த்தவே கார்த்திகை தீபத்திருநாளில் சொக்கப்பனை கொளுத்துகின்றோம்.

காலவெள்ளத்தில் பல விழாக்களை நாம் இழந்துவிட்டோம் ஆனால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி கொண்டாடப் பட்டதோ அது போல இன்றும் கொண்டாடப்படும் விழா விளக்கீடு !கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன.திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும், அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும்.

நற்றிணை 202-need to update

அகநானூறு

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை

 

நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்(பா.எ.88)

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி -(அகம்.141)

அகம்.185, 11-need to update 

முத்தொள்ளாயிரம்:

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்
ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கௌவை தரும்

 

மதுரைக்காஞ்சி:

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்(பா.அடி, 691 – 692)

பட்டினப்பாலை:

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ(பா.அடி, 246 – 248)

பரிபாடல்:

வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
மாறுசெல் வளியி னவியா விளக்கமும் (பா.எ.8)

“ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்”(பா.எ.8)

 

ஐங்குறுநுாறு:

ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற்(பாடல் எண்.405)

 

திருவல்லா செப்பேடு

விளக்கீடு, விளக்கு என்பன அழகான தமிழ்ச்சொற்கள், காலங்காலமாய் கல்வெட்டுகள் மன்னர்களும் குடிமக்களும் கோவில்களில் விளக்கெரித்த செய்தியை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளன !

Screenshot_2019-12-10-16-41-20-465.jpeg
திருவல்லா செப்பேடு

பனையோலைக் கொழுக்கட்டை

கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று `பனையோலைக் கொழுக்கட்டை பிரசாதமும் சிறப்பானது.  பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்!

பனையோலைக் கொழுக்கட்டை

 

 

 

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.

                                                                     ——தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

 

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றும் முறை கார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

மண் விளக்கு நூல் திரி சுத்தமான விளக்கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.

இந்த நாளில் நைவேத்தியமாக அவல், கடலை நெல்பொரி, அப்பம் இவற்றை இறைவனுக்கு படைப்பார்கள்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். எந்த காரணத்தை கொண்டும் தெற்குத் திசையை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது

Continue reading

தீபாவளி

 

deepam
தீபாவளி வாழ்த்துக்கள்

The Crackers and its Significance in Past with Water as Prime Factor for Human Settlements & Civilizational Flourishments. *பாரத வருஷம், 🌏பரத கண்டம்,🇮🇳 சேர-கொங்க🏹🏹🏹 தேசம்* (கொங்கு மண்டலத்தில்) வாழும் *அனைத்து சமுதாய மக்களும்* கொண்டாடும் தீபாவளி முறை

தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்று பொருள்

*தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி*.

தீபாவளி /அமாவாசை
தீபாவளி /அமாவாசை

*பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன்* தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்கள் அனவைரும் தான் இறந்த நாள் அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வதால் *(அன்று மட்டும் வெந்நீர் கங்கையாகும்)* கர்ம வினைகள் அகன்று போகும் என்று வரம் பெறுகிறார்.

(கங்கை💦🌊 பனிகட்டியோடு வெப்பம் சேர்வதால் நீராக மாறுகிறது, மற்ற ஆறுகள் நீர்மேகத்தொடு குளிர்ச்சி சேர்வதால் நீராகி ஓடி வருகிறது. கங்கை நீரில் எப்போதும் உள்ளே அக்னி உள்ளது).

naragasuran
நரகாசுரன்

*நரகாசுரன் இறந்தது சதுர்த்தசி அன்று-அமாவாசைக்கு முந்தைய தினம். நரகசதுர்தசி. அதனால் தான் விடியும் முன்பே குளித்து வெள்ளை வேட்டி அணிந்து ‘வீட்டில் செய்த’  பலகாரங்களை படைத்து தர்ப்பண கடனை முடிக்கிறோம்.*

நல்லெண்ணெய் கொண்டு தீபங்கள் அதிகாலை நேரம் ஏற்றப்பட வேண்டும்.

எள்-தீபம்

கைத்தறியில் நெய்த வெள்ளை வேட்டி அணிவதே பண்டிகையின் சரியான முறையாகும். ஏனெனில் அதுதான் திதியின்போது உடுத்துவேண்டிய உடை. அதை விட்டுவிட்டு brand போட ஓட கூடாது. நரகாசுரன் அதை கேட்கவில்லை.

தீபாவளி அன்று இறைவனுக்கு படைக்கும் பலகாரங்கள் வீட்டில் செய்ய வேண்டும். கடையில் விற்பதை படைக்க கூடாது.

தீபாவளி பட்டாசு வெடிப்பது, பாரம்பரியமாக நம் காணியாச்சி கோவில்களில் தான். *உள்ளூர் கொங்கு உப்பிளியர்* தான் அன்றைய கெமிஸ்ட்ரி. அவர்கள் *குலத்தொழில் சாரை மண்ணில் இருந்து உப்பு காய்ச்சுவது*; அப்படி காய்ச்சும் போது உப பொருளாக வேடியுப்பும் கிடைக்கும். அதை கொண்டு வான வெடி-கல் உடைக்கும் வெடி-போருக்கு குண்டுகள் செய்வது அன்றைய வழக்கம்.

happy-diwali-2017-724x445

*வெள்ளைக்காரன்* காலத்தில் இது பெரிய வணிகம் ஆனால் அவனாலேயே முடக்கப்பட்டது. அமாவாசை தினமான தீபாவளி அன்று காணியாச்சி கோவில் சென்று நாட்டு வெடிகள் வெடிப்பார்கள். அந்த வெடிகள் சுற்று சூழலை பாதிக்காது. மாறாக மழை பெய்ய வழி வகை செய்யும்.

*கொங்கு சமூகத்தில் அசைவ உணவு பழக்கம் கிடையவே கிடையாது.*

இது இடையில் செயற்கையாக நுழைந்தது/திணிக்கபட்டது; இனி கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். அசைவ உணவால் நம் குணமும் அதனால் அனைத்தும் மாறும். அசைவ உணவுகளை நாம் பொதுவாகவே உண்ண கூடாது. அதிலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். *தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகும்.* எனவே நிச்சயம் அசைவம் தவிர்க்க வேண்டிய பண்டிகையாகும்.

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு ‘தீபாவளி’ என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.

மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!

(அகநானூறு – 141ம் பாடல்)

என்று நக்கீரர் பாடுகிறார்.

 

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்– என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.

இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.

அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

‘அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்’ என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

மதுரைக் காஞ்சி:

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்

                                                                    (மதுரைக் காஞ்சி-590ம் பாடல்)

என்று மாங்குடி மருதனார் பாடுகிறார்.

 

நமது முன்னோன் ராமச்சந்திரமூர்த்தி அயோத்திய திரும்பிய நாளே அன்று தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

The most popular tradition behind Diwali dictates that it marks the day on which the Hindu deity Lord Ram returned to his home city of Ayodhya after vanquishing the demon king Ravana. According to mythology, lights were lit all across the country to celebrate his return to rule

rama_returns_in_victory_to_ayodhya_pahari_kangra_fitzwilliam_museum
Return of Ram to Ayodhya
Naraka
Krishna Battles the Armies of the Demon Naraka

 Bhagavata Purana Manuscript

The Bhagavata Purana describes Vishnu’s avatars with particular attention to his form as Krishna. In this painted folio, the demon Naraka and his consort are seen in the palace interior of their fortified city of Pragyotisha, overseeing a fierce battle scene. Krishna and his consort Satyabhama enter the fray, carried by Vishnu’s birdman mount, Garuda. The figure-types and soldier’s attire directly borrow from Muslim Sultanate-period painting conventions of the fifteenth and early sixteenth centuries

தீமைகள் நீங்க வேண்டும் எனப் பிரார்த்தனையுடன் இச்செய்தியைத் தருகிறேன்.

https://www.metmuseum.org/toah/works-of-art/1985.34/

சிலப்பதிகாரம்-குடிமக்கள் காப்பியம்

Siragu-silappadhikaaram-3
சிலப்பதிகாரம்

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது இந்த சிலப்பதிகாரம் இதனை எழுதியவர் இளங்கோவடிகள். சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவான படைப்பு என்பதனால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது.இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.

சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவி என்றால் அது கோவலனும் கண்ணகி மட்டுமே.

சிலப்பதிகாரம்
கோவலனும் கண்ணகி  கவுந்தி அடிகள்

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் – பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார்.

சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு….). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த…)

சிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது.அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.

சிலம்பில் இடம்பெறும் இசைப்பாடல்கள்

சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன .அதுபோல் கானல்வரியில்,ஆற்றுவரி ,கந்துகவரி  உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.

 

காண்டங்கள்

சிலப்பதிகாரம்  மூன்று பகுதிகளை கொண்டது ,முறையா அவை சோழ பாண்டிய சேர நாடுகளில் நடைபெறுகிறது.

  • புகார்க் காண்டம்
  • மதுரைக் காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

புகார்க் காண்டம்:

 

Related image
 புகார்க் காண்டம்

இது 10 காதைகளைக் கொண்டது.அவை,

  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை.
  3. அரங்கேற்று காதை.
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  6. கடல் ஆடு காதை.
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை.
  10. நாடு காண் காதை

 

மதுரைக் காண்டம்:

 

   மதுரைக் காண்டம்

இது 13 காதைகளைக் கொண்டது. அவை,

  1. காடு காண் காதை,
  2. வேட்டுவ வரி,
  3. புறஞ்சேரி இறுத்த காதை,
  4. ஊர் காண் காதை,
  5. அடைக்கலக் காதை,
  6. கொலைக்களக் காதை,
  7. ஆய்ச்சியர் குரவை,
  8. துன்ப மாலை,
  9. ஊர் சூழ் வரி,
  10. வழக்குரை காதை,
  11. வஞ்சின மாலை,
  12. அழற்படுகாதை,
  13. கட்டுரை காதை

 

வஞ்சிக் காண்டம்:

silappathigaram-vanji-kaandam_FrontImage_863
வஞ்சிக் காண்டம்

இது ஏழு காதைகளைக் கொண்டது. அவை,

  1. குன்றக் குரவை
  2. காட்சிக் காதை
  3. கால்கோள் காதை
  4. நீர்ப்படைக் காதை
  5. நடுநற் காதை
  6. வாழ்த்துக் காதை
  7. வரம் தரு காதை

 

சிலப்பதிகாரம்   சம்பந்தமான எனது மற்ற பதிவுகள்:

தகவல் உதவி :

http://silapathikaram.com/blog/?p=7510

http://www.tamilvu.org/library/l3100/html/l3100ind.htm

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram.html

Click to access %E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D).pdf

http://www.storytellingandvideoconferencing.com/18.html

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய முருகன் தலம் எது?

இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

Siragu-silappadhikaaram-3
சிலப்பதிகாரம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். சேரநாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன். கண்ணகிக்குச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்தவன் அவன். அவனது தம்பி இளங்கோ.

கண்ணகியின் காவியத்தை அற்புதமாக சிலப்பதிகாரமாகத் தந்தவர் இளங்கோ அடிகள். அண்ணனே முடி சூட வேண்டும் என்று துரவறம் பூண்ட பெருந்தகை இளங்கோ. சீத்தலைச் சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர்.

அந்தக் காப்பியத்தில் குன்றக் குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்து அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இளங்கோவடிகளின் காலம் சுமார் 1850 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

அப்படிப்பட்ட இளங்கோவடிகள் போற்றிப் புகழ்ந்த திருச்செங்கோட்டுத் தலம் கொங்குமண்டலத்தில் தான் உள்ளது என்று கொங்குமண்டல சதகம் தனது 61ஆம் பாடலில் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் இது தான்:-

“உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்

இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்

கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்

வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் : மனச்சான்றுக்கு வழுவில்லாது நடக்கும் சேரன் செங்குட்டுவனது ஒப்பற்ற தலைவனான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளும் திருச்செங்கோடு என்னும் திருத்தலமும் கொங்குமண்டலம் என்பதாம்.

திருச்செங்கோடு பண்டைக் காலத்திலிருந்தே பெரும் புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை எண்ணி மகிழ முடிகிறது

செங்கோட்டுவேலவர்
செங்கோட்டுவேலவர்

 

செங்கோட்டு வேலவர் “அழகு மிளிரும்” நின்ற திருவுருவம்

 

தகவல் உதவி :

http://www.tamilvu.org/library/l5730/html/l5730012.htm