போகிப் பண்டிகை/காப்புக்கட்டு நோம்பி

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் .போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.முன்னோர்களுக்கான பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.போகியன்று, கொங்கு பகுதிகளில் வீட்டின் கூரையில் செருகப்படும் ஆவாரம் பூ, பூலாப்பூ,வேப்பிலை இதை காப்புக்கட்டு என்பார்கள்.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ,பூலாப்பூ(பூளைப்பூ) வைத்து  ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

 

Image result for பூளைப்பூ
பூளைப்பூ

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை கொங்கு வட்டர வழக்கில் பூளாப்பூ என்பர்

வேளாண் பூதம் அணியும் பூக்களில் ஒன்று பூளை பூ

போகத்தை==விளைச்சலை தந்தவன் ,போகி என்றால் இருவரை குறிக்கும்.

  • நாஞ்சில் வலவன்/வாலியோன்/பலராமன்/நாஞ்சிற்பனைக் கொடியோன்
  • இந்திரன்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.வைகறையில்(காலைநேரம்) ’நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும்.

வாலியோன்:

மாயோனும்,வாலியோனும் அன்றைய ம் விவசாய குடிகளின் இரட்டை தெய்வங்கள்

Krishna & Balarama

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட “வேளாண்மைக்கடவுள்” என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் “போகியின்” தெய்வம் அவனே.

Balarama

மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

தமிழகத்தில் உலக்கை தாடியனுக்கு சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன என்பர் சிலம்பு வாயிலாக அறிகிறோம்.பின்வரும் சிலம்பு பாடல் அதை தெளிவாக விளக்குகிறது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”(சிலப்பதிகாரம்)

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும், 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை கூறுவது

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி –(நற்றிணை 32)

மாயோன் – கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவிஅதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து “இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது” என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறதுபலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி.

இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை “நாஞ்சில் வலவன்” எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

காண்க

 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு–(கார் நாற்பது-19)

நாஞ்சில் வலவன் – கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை-பூங்கொம்பினையும், செங்கால் – செவ்விய தாளினையுமுடைய, மரா அம் – வெண்கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி-பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன் கையாள் – முன்னங்கையை யுடையாளின், தோள் – தோள்கள், துணையாவேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று

 

Related image
நாஞ்சில்வலவன்- Balarama with Plough

 

புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப்
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப்
பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச்–(தளவாய்புரச் செப்பேடு)

மேல குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்  பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே,போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே!

இந்திரன்:

போகி என்றால் இந்திரனையும் குறிக்கும்.இந்திரனே மழைக்கு அதிபதி.ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது.

இந்திரா வழிபாட்டின் வீழ்ச்சி:

மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்”–(தொல்காப்பியம்)

போகி பலராமன் விழாவே இந்திரா விழா சித்திரை மாதம் நடந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது

பூம்புகாரில் இந்திர விழாவின்போது

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும்சொரிந்து”–(சிலப்பதிகாரம் )

இந்திரா விழா சமயத்தில் பொங்கல் வைத்த இந்திரனை வழிபட்டு இருக்கலாம் ஆனால் தை மாதம் வரும் பொங்கல் விழா பலராமன்/உலகை தடியனின் விழா தான்.