சித்திரை திருநாள்

 

சித்திரை முதல் தேதி, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது சந்திரசூரியமான மாதம்.

இந்த மேச சங்கிராந்தியில், பாரத வருஷத்தில் சூடு ஜாஸ்தியாகி பூமத்திய ரேகைக்கு வடக்கு நோக்கி, இந்து மகா சமுத்திரத்தில் காற்று பாரத வருஷத்திற்கு உள்ளே நுழையும். அது முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். அதுவே புது வருஷம் (வர்ஷம் என்றால் மழை). அதன் பின் பருவமழை ஆரம்பித்து பாரத வர்ஷம் முழுதும் பெய்யும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக வடகாற்றாக மாறி மார்கழிக்கு பின்பு மழை நின்று பங்குனியில் சுத்தமாக நின்று விடும். அதோடு அவ்வரூசம் முடிந்தது. வெள்ளாமையும் முடியும்.

பங்குனியில் வெயில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென் காற்று வடக்கே வராது. “இதனாலேயே, பங்குனியில் மழை பெய்தால் பரக்கோலம்” பழமொழியும் கொங்கு நாட்டில் உள்ளது.

ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பாரத வருஷத்திற்கே இதுதான் புது வருஷம்.

சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் வேளாளர் பண்டிகை.இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள்.பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதலில் துவங்கிவைப்பர் பிறகு கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த அழகிய கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள்.  கொங்குப் பகுதியில்(ஒரு சில இடங்களை தவிர) அருகிப் போயிருந்தாலும் பண்டைய பாரதத்தின் பிற பகுதிகளிலும்(பாரத வருஷத்தில் தென்கிழக்கு சீன உட்பட கம்போடியா, பிளிப்பன்ஸ், இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்கும்) இன்று வரை நடைபெறுகிறது.

royal ploughing ceremony

ஏன் வெளிநாடுகளில் இந்த வைபவம் நடைபெறுகிறது என்று கேள்வி எனக்கு எழுந்தது?? அதற்கான விடையும் கிடைத்தது??

  • ஜனகர் பொன்னேர் பூட்டும் பொழுது சீதாதேவி வெளியே வந்தார் சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
  • In Valmiki’s Ramayana and its Tamil version Kamban’s Ramavataram, Sita is said to have been discovered in a furrow in a ploughed field, believed to be Sita, and for that reason is regarded as a daughter of Bhūmi Devi (the goddess earth). She was discovered, adopted and brought up by Janaka, king of Mithila and his wife Sunaina

 

  • சித்திரை 1 சித்திர மேழி வைபவம் அது என்ன சித்திர மேழி வைபவம் முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல் சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும் மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும் வைபவம் = திருவிழா என்று பொருள்.
  • மழை புதிதாக ஆரம்பித்து புது வெள்ளாமை செய்ய சித்திரையில் சித்திரைமேழி உழவு அல்லது பொன்னேர் உழவு (பொன் + ஏர்) செய்து ராஜாக்கள் பாரத வருஷத்தில் உழவை ஆரம்பித்து வைப்பர். இன்றும் பாரத வர்ஷத்தின் கிழக்கு நாடுகளான கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் உள்ளது. இன்றும் கொங்கு நாட்டில்(கொல்லிமலை,பொள்ளாச்சி) , சோழதேசம் ஆகியவற்றில் புது மழையை ஒட்டி வேளாளர்கள் /வெள்ளாளர்கள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
  • சித்திரமேழிசபை என்பது சோழராட்சியில் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு. மேழி என்றால் ஏர். உழவுக்கு பயன்படும் ஏர் தான் இந்த அமைப்பின் சின்னம்.இராஜேந்திரசோழன் காலத்தில் அரசாங்கத்தின் வரிவிகிதம் போன்ற சில நடவடிக்கைகளை எதிர்த்து வேளாளர்கள் ஒன்று திரண்டு “சித்திரமேழி பெரியநாட்டார் சபை” என்ற ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டனர். அவர்களின் சின்னம் தான் சித்திரமேழி அலங்கரிக்கப்பட்ட ஏர்கலப்பை என்று பொருள்.
  • அண்ணமார் கதையில் குன்னுடையா கவுண்டர்(எங்கள் முப்பாட்டன் ) பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
  • கிபி 17-ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பு கொண்ட சித்திரமேழி
  • இளம்பூரண அடிகள் ‘கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்றார்.
  • வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த இளங்கோ அடிகள் பொன்னேரைப் பாடியது பொருத்தமே

  Image

  • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் பொ.பி 12-ஆம் நூற்றாண்டு சோழர்கால சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு!

 

Image

சங்க இலக்கியத்தில்:

 

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே” (அகநானூறு -01)

மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவான்.

 

பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி 
நல்மா மேனி தொலைதல் நோக்கி”(அகநானூறு -229)
பொன்னிறம் போன்ற பசலைகள் மேனியிலே படர்ந்தன. புள்ளிகளாகிய தேமல்களையும் வரிகளையும் உடைய நல்ல சிறந்த மேனியின் வனப்பெல்லாம் தொலைந்து போகின்றன.

 

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து,விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்“(சிலப்-135)

மிகுதியாகக் கொடிப்போல் வளர்ந்த நீண்ட அறுகம் புல்லையும்,குவளை மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து தொடுத்த மாலையினைச் சூட்டி,போற்றுவோர் வணங்கி நிற்க,நிலத்தையே பிளக்கும் வண்ணம்,ஏரைப் பூட்டி நிற்கும் உழவர் பாடும் ஏர்மங்கலப் பாடலின் ஒலி ஒருபுறம் கேட்கும்.

 

“கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” – (சிலப்.10:13:2-5)
சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, “செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க” என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார்.குவளை மலர் வேளாளர்கள் சின்னம்/அடையாளம்
“களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்”-
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர,அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

 

பொன் ஏர் மேனி மடந்தையொடு 
வென்வேல் விடலை முன்னிய சுரனே. 
(ஐங்-388)
செறிந்த தொடியையும் பொன் போன்ற அழகிய மேனியையும் உடைய மங்கையுடன்.
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே-(குறுந். 319)
பொன்னையொத்த எனது மேனியின்  நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்
“அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க் கடிகொண்டார் பெருங்கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு“-(கார் நாற்பது)

வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தழையை மாலையாகச் சூடிக்கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.

கொங்கு வேளாளர் சித்திரமேழிக்கொடி

இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு,நாட்டு மாட்டை வைத்து வேளாளர்கள் உழவு செய்ய வேண்டும்.

  • சார்வாரி வருஷ மேஷ சங்கராந்தி வாழ்த்துக்கள்.🙏

போகிப் பண்டிகை/காப்புக்கட்டு நோம்பி

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் .போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.முன்னோர்களுக்கான பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.போகியன்று, கொங்கு பகுதிகளில் வீட்டின் கூரையில் செருகப்படும் ஆவாரம் பூ, பூலாப்பூ,வேப்பிலை இதை காப்புக்கட்டு என்பார்கள்.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ,பூலாப்பூ(பூளைப்பூ) வைத்து  ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

 

Image result for பூளைப்பூ
பூளைப்பூ

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை கொங்கு வட்டர வழக்கில் பூளாப்பூ என்பர்

வேளாண் பூதம் அணியும் பூக்களில் ஒன்று பூளை பூ

போகத்தை==விளைச்சலை தந்தவன் ,போகி என்றால் இருவரை குறிக்கும்.

  • நாஞ்சில் வலவன்/வாலியோன்/பலராமன்/நாஞ்சிற்பனைக் கொடியோன்
  • இந்திரன்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.வைகறையில்(காலைநேரம்) ’நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும்.

வாலியோன்:

மாயோனும்,வாலியோனும் அன்றைய ம் விவசாய குடிகளின் இரட்டை தெய்வங்கள்

Krishna & Balarama

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட “வேளாண்மைக்கடவுள்” என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் “போகியின்” தெய்வம் அவனே.

Balarama

மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

தமிழகத்தில் உலக்கை தாடியனுக்கு சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன என்பர் சிலம்பு வாயிலாக அறிகிறோம்.பின்வரும் சிலம்பு பாடல் அதை தெளிவாக விளக்குகிறது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”(சிலப்பதிகாரம்)

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும், 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை கூறுவது

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி –(நற்றிணை 32)

மாயோன் – கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவிஅதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து “இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது” என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறதுபலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி.

இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை “நாஞ்சில் வலவன்” எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

காண்க

 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு–(கார் நாற்பது-19)

நாஞ்சில் வலவன் – கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை-பூங்கொம்பினையும், செங்கால் – செவ்விய தாளினையுமுடைய, மரா அம் – வெண்கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி-பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன் கையாள் – முன்னங்கையை யுடையாளின், தோள் – தோள்கள், துணையாவேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று

 

Related image
நாஞ்சில்வலவன்- Balarama with Plough

 

புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப்
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப்
பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச்–(தளவாய்புரச் செப்பேடு)

மேல குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்  பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே,போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே!

இந்திரன்:

போகி என்றால் இந்திரனையும் குறிக்கும்.இந்திரனே மழைக்கு அதிபதி.ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது.

இந்திரா வழிபாட்டின் வீழ்ச்சி:

மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்”–(தொல்காப்பியம்)

போகி பலராமன் விழாவே இந்திரா விழா சித்திரை மாதம் நடந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது

பூம்புகாரில் இந்திர விழாவின்போது

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும்சொரிந்து”–(சிலப்பதிகாரம் )

இந்திரா விழா சமயத்தில் பொங்கல் வைத்த இந்திரனை வழிபட்டு இருக்கலாம் ஆனால் தை மாதம் வரும் பொங்கல் விழா பலராமன்/உலகை தடியனின் விழா தான்.