திருக்கார்த்திகை-கார்த்திகை தீபம்

 

கார்த்திகை விளக்கீடு !

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.. அக்னி ஸ்வரூபமாக போற்றப்படும் சிவனுக்கும், சிவ அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம்.பொதுவாக கார்த்திகை மாதத்தில் இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது.கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’  போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம்

அறிவியல் கரணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து கார்த்திகை தீபத்திருநாள் கொண்டபப்படுகிறது.மழைக்காலங்களில் வரும் தோற்று கிருமிகளை அன்றைக்கே களைந்து குழந்தைகள் பெரியோர்களை காக்கும் ஒரு நுட்பம்  இந்த தீபத்திருநாள் .காற்றில் உள்ள நுண்ணிய கிருமிகளை சொக்கப்பனை அல்லது மாவொளி  நெருப்பு பொறிகள்  அழிப்புது உண்மை.இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் இதை ஈராயிரம் ஆண்டுகளுக்காக கடைபிடிக்கிறாரகள்.

சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டில் கார்த்திகை பற்றி விளக்கம்

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்:

  1. தெறுகால்
  2. தேள்
  3. விருச்சிகம்

கார்த்திகை நாளைக்குறிக்கும்சொற்கள்:

  1. அங்கி
  2. அளக்கர்
  3. அளகு
  4. அறுவாய்
  5. ஆரல்
  6. இறால்
  7. எரிநாள்
  8. நாவிதன்

அறுமுகனும் தீபத்திருநாளும்:

சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.

கார்த்திகை தீபா திருநாள் மூன்று நாள் கோலாகலமாக நடக்கும் , ஊரே ஒளியால் மிளிரும். பெண்கள் குழந்தைகள் கும்மி வட்டமாக அடித்து பாடல்கள் படுவார்கள் வட்டமாக

  1. பெரிய கார்த்திகை
  2. நாட்டுக் கார்த்திகை
  3. கொல்லைக் கார்த்திகை

பெரிய கார்த்திகை:

மலைகளில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை   I.e திருவண்ணமலை , பழனி

நாட்டுக் கார்த்திகை:

நீர்நிலகைளில் , கோவில்களில் தீபம் ஏற்றுவது நாட்டு கார்த்திகை. இது பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவது.இந்த நாட்டு கார்த்திகை நாளில் கொங்கர்கள் தலைமுறை தலைமுறையாக  தங்கள் குலதெய்வ கோவில்களில் விளக்கு ஏற்றுவார்கள் .

கொல்லைக் கார்த்திகை:

கழனிகளில்( வயல்வெளிகளில்) குப்பைமேட்டில் விளக்கு ஏற்றுவது கொல்லை கார்த்திகை இது தீபத்தின் மூன்றம் நாள்.இந்த மூன்றம் நாளில் மக்கள் சொக்கபானை கொளுத்துவார்கள்.

Image result for சொக்கப்பனை
சொக்கப்பனை
சொக்கப்பனை

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் நடுவில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அவர்களின் அகந்தையை போக்குவதற்காக எம்பெருமான் ஈசன், திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடிவருகிறோம்.

திருவண்ணாமலை தீப திருவிழா

                                       ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

 

அருணாசலபுராணம் :

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.

`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார்

 

பெரியபுராணம்:

 

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும் தழல் பிழம்பாய் தோன்றியத தெளிந்தார்

சங்க இலக்கியம் கூறும் கார்த்திகை தீபம்

  1. தேவாரம்
  2. நெடுநல்வாடை
  3. நற்றிணை
  4. அகநானூறு
  5. தேவாரம்
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. சீவகசிந்தாமணி
  9. நற்றிணை
  10. அகநானூறு
  11. முத்தொள்ளாயிரம்
  12. மதுரைக்காஞ்சி
  13. பட்டினப்பாலை
  14. பரிபாடல்
  15. ஐங்குறுநுாறு

 

திருஞானசம்பந்தர் தேவாரம்:

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

வளை – வளையல். மறுகு – தெரு. வண்மை – தெருவினர் கொடைவளம். துளக்கு – அசைவு. தளர்வு, வருத்தம். இல் – இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து – சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க
  • பண்:சீகாமரம்
  • பாடல் எண் :3
  • பாடியவர் :திருஞான சம்பந்தர்
  • தலம்: திருமயிலாப்பூர்

 

நெடுநல்வாடை:

செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்வித ஒவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெந் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் துாஉய்க் கைதொழுது(பாடல் அடி.40 – 42)

ஈர்ந்திரி – நெய்யால் நனைந்த திரி. இரும்பு செய் விளக்கு – தகளி. இதன் வழி அக்கால மக்கள் தெய்வ பக்தியுடன் விளங்கியதை நாம் அறியலாம்

கார் நாற்பது:

நலம் மிகு கார்த்திகை நாட்டவரிட்ட

–பொய்கையார்

களவழி நாற்பது:

கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே

 

சீவகசிந்தாமணி

குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன

தொல்காப்பியத்தில்

வேலை நோக்கிய விளக்குநிலையும் – வேலினைக் குறித்த விளக்கு நிலையும்.
நோக்குதலாவது , விளக்கு ஏதுவாக வேவின் வெற்றியைக் காட்டுத

  • பாடல் எண் :14
  • பாடியவர் :தொல்காப்பியர்
  • உரை :இளம்பூரணர்

நற்றிணை:

சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்களில் நற்றிணை சிறப்பான ஒரு தொகுப்பு. அதில் வரும் 58வது பாடலை முதுகூற்றனார் என்பவர் எழுதியுள்ளார்  அப்பாடலில் தீபத்தைப் பற்றினக் குறிப்பு உள்ளது.

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்  
ஓடுதேர் நுண் நுகம் நுழைந்த மாவே

  • பாடல் எண் :நற்றிணை 58 
  • பாடியவர் :முதுகூற்றனார்
  • திணை:நெய்தற் திணை

 

English version  of Natrinai  poem

May the horses hitched to the chariot
of the lord of the cold shores with tall
waves, suffer beating,
like the sparrows painted on the eyes
of sweet-toned drums hanging on the
shoulders of very wealthy children
wearing gold jewels,
that are hit with drumsticks!

They caused us to return with sad
hearts and exhausted bodies, at this
helpless evening time,
when delicate dew drops fall, drums
and white conch shells of Veerai’s king
Veliyan Thithan are sounded, and when
rows of lamps are lit.

Meanings:  பெரு முது செல்வர் – very rich people, பொன்னுடைப் புதல்வர் – gold jewels wearing sons, சிறு தோள் கோத்த – hung on their small shoulders, செவ்வரி – lovely sounds, பறையின் – of the drums, கண் அகத்து – on their eyes, எழுதிய – drawn, குரீஇப் போல – like the sparrows (குரீஇ – சொல்லிசை அளபெடை), கோல் கொண்டு – with drum sticks, அலைப்ப – to be hit, படீஇயர் – let them suffer (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், expletives, வீரை வேண்மான் வெளியன் தித்தன் – Vēlir king Veliyan Thithan of Veerai, முரசு முதல் – with drums and others, கொளீஇய – lit (சொல்லிசை அளபெடை), மாலை விளக்கின் – with the rows of lamps,  வெண்கோடு – white conch shells, இயம்ப – creating sounds, நுண் பனி அரும்ப – as delicate dew drops fall, கையற வந்த பொழுதொடு – at the helpless time, மெய் சோர்ந்து – with tired bodies, with exhausted bodies, அவல நெஞ்சினம் – we are of sad hearts, பெயர – to move, உயர் திரை – tall waves, நீடு நீர் – abundant water, பனித் துறைச் சேர்ப்பன் – the lord of the cold shores, ஓடு தேர் – fast chariot, நுண் நுகம் – fine yoke, நுழைந்த மாவே – the horses that entered the yoke, the horses that got tied to the yoke (ஏ – அசை நிலை, an expletive)

வெளியன் தித்தன்

உறையூர்த் தித்தன் என்று சங்க. நூல்கள் கூறுவது கொண்டு, வேளிர் குலத்தவனான

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

வெளியன் என்பது கொங்கு வேளாள கவுண்டர்கள் குலங்களில்( கோத்திரங்களில்) ஒன்று,தித்தன் என்பது இவன் தந்தை பெயர்.

Tittan’s son Tittan Veliyan is his son Veliyan. At that time, the name of the father is referred to as the Tittan Veliyan .Veliyan is the Gothra (Kootam) name of kongu velala gounder community one of the largest ethnic community in Tamilnadu

அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும்பெயர்க்கு உருகியாங்கு

வீரை என்னும் ஊரில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது. வேளிர்குடிப் போராளிகள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவ்வூர் அரசன் வெளியன் தித்தன். இவன் உப்பளங்களில் பணியாற்றுவோருக்கு இரவில் உதவும் வகையில் மாலை நேரத்தில் முரசை அகலாகக் கொண்டு விளக்கேற்றி வைத்தான்

வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு

பாடல் எண் :நற்றிணை 58
பாடியவர் :முதுகூற்றனார்
திணை:நெய்தற் திணை

எம்பெருமான் ஈசனை அக்னி  வழிபடுவதே இதன் அர்த்தமாகும். இதனை உணர்த்தவே கார்த்திகை தீபத்திருநாளில் சொக்கப்பனை கொளுத்துகின்றோம்.

காலவெள்ளத்தில் பல விழாக்களை நாம் இழந்துவிட்டோம் ஆனால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி கொண்டாடப் பட்டதோ அது போல இன்றும் கொண்டாடப்படும் விழா விளக்கீடு !கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன.திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும், அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும்.

நற்றிணை 202-need to update

அகநானூறு

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை

 

நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்(பா.எ.88)

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி -(அகம்.141)

அகம்.185, 11-need to update 

முத்தொள்ளாயிரம்:

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்
ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கௌவை தரும்

 

மதுரைக்காஞ்சி:

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்(பா.அடி, 691 – 692)

பட்டினப்பாலை:

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ(பா.அடி, 246 – 248)

பரிபாடல்:

வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
மாறுசெல் வளியி னவியா விளக்கமும் (பா.எ.8)

“ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்”(பா.எ.8)

 

ஐங்குறுநுாறு:

ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற்(பாடல் எண்.405)

 

திருவல்லா செப்பேடு

விளக்கீடு, விளக்கு என்பன அழகான தமிழ்ச்சொற்கள், காலங்காலமாய் கல்வெட்டுகள் மன்னர்களும் குடிமக்களும் கோவில்களில் விளக்கெரித்த செய்தியை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளன !

Screenshot_2019-12-10-16-41-20-465.jpeg
திருவல்லா செப்பேடு

பனையோலைக் கொழுக்கட்டை

கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று `பனையோலைக் கொழுக்கட்டை பிரசாதமும் சிறப்பானது.  பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்!

பனையோலைக் கொழுக்கட்டை

 

 

 

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.

                                                                     ——தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

 

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றும் முறை கார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

மண் விளக்கு நூல் திரி சுத்தமான விளக்கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.

இந்த நாளில் நைவேத்தியமாக அவல், கடலை நெல்பொரி, அப்பம் இவற்றை இறைவனுக்கு படைப்பார்கள்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். எந்த காரணத்தை கொண்டும் தெற்குத் திசையை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது

Continue reading