#பிஜேபிஅதிமுக சாதிஅரசியல்****# வெள்ளாளர் வேளாளர் பள்ளர்***

பாகம் :1

தற்போது நெருங்கி வரும், தமிழக சட்டசபை தேர்தல் 2021க்காக அரசியல் கட்சிகள், ஓட்டுக்காக பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்து விட்டது.

அதில் பிஜேபி கட்சியும்,அதிமுகவும் அதிரடியாக சாதி அரசியலில் இறங்கியுள்ளது.

சாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக கட்சியை வீழ்த்துவதற்காவே, பிஜேபி இம்முயற்சியை எடுத்துள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காலங்காலமாகவே பள்ளர்,குடும்பர் என்ற பெயர்களில் கல்வெட்டுகள் மூலமாக 1000வருடங்களாக அறியப்பட்ட சமூகத்தை, அந்த சமூகத்தை ஏதோ 20% இடஒதுக்கீடு கொடுப்பது போல, சுயசாதி இழிவில் இருந்து உங்களை விடுவிக்கிறேன் என பிரதமர் இவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயருடன் இனி அழைக்கப்படுவார் என அறிவித்தார்.

வேளாளர்,வெள்ளாளர் என பழங்காலமாகவே இங்கு ஒரு பெரும்பான்மையான சமுதாயம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து வாழ்ந்து வருவதை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து, பிரதமர் மோடியும், அதே வேளாளர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடியாரும் செய்திருப்பதை, அச்சமூகம் பல்வேறு எதிர்ப்புகளையும்,கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது.

இப்பெயருக்கு யார் சொந்தக்காரர்கள் என்ற விவாதத்திற்கு முன்பு இருவரின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் எவ்வளவு வாக்கு வங்கி, அதிமுகவிற்கு சாதக,பாதகத்தை கொடுக்கப் போகிறது என பார்க்கலாம்.

கிபி 1891ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில்:-

வ்வேல

பள்ளர் சமூகம்:-

அம்மா பள்ளர் – 12,991
ஆத்தா பள்ளர். – 1,05,607
அஞ்ஞா பள்ளர் – 1,00,696
அய்யா பள்ளர் – 32,391
தேவேந்திர பள்ளர் – 75,780
கடையன். – 18,830
மங்க நாட்டு பள்ளர் – 15,544
சோழிய பள்ளர் – 41,015
தொண்டை மண்டல
பள்ளர். – 49231

மொத்தம் – 4,52,085

அதே கிபி1891ல் வெள்ளாளர் சமூகம்:-

கார்காத்தார் – 1,37,245
கொடிக்கால் – 45,836
கொண்டைகட்டி – 31,012
கொங்கு – 4,19,526
பாண்டிய – 60,825
செந்தலை – 1,67,183
சோழிய – 2,24,076
தென்திசை – 2,31,371
தொண்டை மண்டல – 61,837
துளுவ – 1,91,098

மொத்தம் – 15,70,005

அடுத்ததாக கிபி1971ல் இந்திய அரசால் எடுக்கப்பட்ட தாழ்ந்தப்பட்ட சமூக கணக்கெடுப்பு மூலமாக பள்ளர் சமூகத்தின் மக்கள் தொகை :-

பள்ளர் – 12,08,833

சுமார் 90வருடங்களில் 2.7% அதிகரித்துள்ளது.

அதே விகிதத்தில் கணக்கிட்டால் வெள்ளாளர்கள்:-

மொத்த வெள்ளாளர்கள் – 42,39,013

90 வருடங்களில் 2.7% என்றால் தற்போது உள்ள 2021க்கு 3.5% மக்கள் தொகை அதிகரித்திருக்கும்.

ஆக 2021ல்
பள்ளர் – 45,30,915

வெள்ளாளர் – 1,48,08,202 பேர் இருப்பார்கள் என்பது இங்கு உத்தேச மக்கள் தொகையாக இருக்கும்.

எப்படி பார்த்தாலும் பள்ளர் சமூகத்தை விட 3மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட வெள்ளாளர் சமூகத்தின் வாக்கு வங்கி, தேவேந்திர குல வேளாளர் என்ற அரசு ஆனை மூலகமாக, அதிமுகாவை முற்றிலுமாக அனைத்து தொகுதிகளிலும் 12% வாக்கு வங்கியை உடைக்கும்.

அதேபோல் பிஜேபி பள்ளர் சமூக தலைவர் ஜான் பாண்டியனை மட்டுமே ஆதரிக்கிறது, கிருஷ்ணசாமியை கைவிட்டுள்ளது. மேலும் கிருஷ்ணசாமி பட்டியல் வெளியேற்றத்தையே கோரிக்கையாக வைக்கிறார்.

ஆக பள்ளர் சமூகத்தின் ஓட்டுக்கள் திமுக,கிருஷ்ணசாமி,அமமுக என பிரியும் ஏனென்றால் இந்த மூன்று கட்சிகளில் ஒன்றியச் செயலாளர் முதற்கொண்டு பள்ளர் சமூகம் உள்ளது. ஆக முழுமையான ஓட்டும் அதிமுகாவிற்கு விழாது.

இவ் அரசானை மூலமாக அதிமுகாவிற்கு 1% ஓட்டு கிடைப்பது கூட சந்தேகமே.

பிஜேபி ஆதரவு நிலைப்பாடை எடுத்த மாநில கட்சிகளின் பரிதாப நிலையே அதிமுகாவிற்கு 2021ல் நடக்கும் என்பதே தார்மீகம்.

குறிப்பு:-

இந்த அரசானைக்கு எதிராக வாதிரியார் மற்றும் கடையர் சமூகத்தினர் முழுமையாக போராடி வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Source:-
Census of India 1881
Dalit Census of India 1971

ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழைக்கு வித்திட்டு அரசாணை வெளியிட்டிருக்கிறது பாஜக. அதற்கு துணை போயிருக்கிறது அதிமுக &திமுக).

கவுண்டர், முதலியார், பிள்ளை எனும் பட்டங்கள் கொண்டு தமிழகம் முழுவதும் பரவி தனிப் பெரும்பான்மையுடன் வாழ்ந்து வரும் “வேளாளர்”களின் சாதிப் பெயரை சம்பந்தப்பட்ட வேளாளரிடம் கலந்து கருத்து கேட்காமலே… எந்த வித ஆய்வும், ஆதாரமும், ஆலோசனையும், ஒப்புதலும் இல்லாமல் தாரை வார்த்திருக்கின்றனர்.

இதுவரை எந்த பெரிய சிக்கலும் இன்றி ஒட்டி நெருக்கமாக வாழ்ந்து வரும் இரு சமுதாயங்களுக்கு நடுவே பிரச்சனையைத் தூண்டி விட்டிருக்கிறது ஆடிட்டர் & கோ!

ஏற்கனவே நீதிமன்றத்தில் நிராகரிக்கப் பட்ட இந்த பெயர் மாற்றக் கோரிக்கையை வலிந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் செய்யலாம் என மாற்றி அறிவித்திருக்கின்றனர்.

பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் என்னும் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து – தேவேந்திர குல “வேளாளர்” – என பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை பிப்ரவரி 14-ஆம் தேதி சென்னை வந்த மோடி அறிவித்திருக்கிறார். இந்த மசோதா கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற இருக்கிறது.

இது பல பண்பாட்டுச் சிக்கல்களையும் உரிமையியல் பிரச்சனைகளையும் இழுத்து விடும் செயல். வேளாளர்களின் சைவ ஆதீனங்கள், ஆதீன சொத்துக்கள், நமது பல்வேறு கோயில் உரிமைகள், சரித்திர-தொல்லியல் ஆவணங்கள் என வேளாளர்களின் பெயரில் உள்ள வரலாறுகளும் உரிமைகளும் இனிமேல் பொய்யாக குறிப்பிட்ட அந்த சமுதாயத்தால் உரிமை கோரப்படும். அதனால் இரு சமூகத்திடையே நிலவி வரும் ஒற்றுமை சீரழிக்கப்படும்.

வலிமையாகவும் நேர்மையாகவும் வேளாளர் தரப்பில் இருந்து காட்டப்பட்ட எதிர்ப்பை இரு அரசுகளும் பொருட்படுத்தவில்லை.

இந்த எதிர்ப்பு போதவில்லையாம். எதிர்ப்பு கடுமையாக இல்லையாம். என்ன எதிர்பார்க்கிறார்கள் பாஜகவினர்?

ஒவ்வொரு பிரச்சனைக்கும் பேசித் தீர்வு காண முடியாது என்றால்….
போராட வேண்டும், எதையாவது உடைக்க வேண்டும், கொழுத்திப் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றனரா? தமிழகம் பற்றி எரிய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களா? அப்படி தான் இருக்கிறது அவர்களது பதில்கள்.

தனது சொந்த இன மக்களுக்கே துரோகம் இழைத்திருக்கும் முதல்வருக்கு சொல்ல ஒன்றும் இல்லை. இனிமேல் மான உணர்வு உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவார்.

தேர்தல் பொழுதில் மட்டும் கூட்டம் கூட்டி ஒன்னு ரெண்டு சீட்டு வாங்கி ஜம்மென்று மூன்று கலரில் தோளில் துண்டு போர்த்திக் கொள்ளும் கட்சிகள் இனிமேல் அவற்றை தலையில் போட்டுக் கொண்டு போகலாம். முடிந்தால் அதிலேயே தூக்குப் போட்டுத் தொங்கி விளையாடுங்கள்.

இனிமேல் இது தான் நாட்டின் நிலைமை. இந்துத்துவம் என்கிற பெயரில் ஓட்டு அரசியல் செய்து வரும் பாஜக தன் சுயலாபத்துக்காக எந்த அளவிற்கும் கேவலமாக இறங்கி வேலை செய்யும். கட்சியையும் ஆட்சியையும் சேர்த்த சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எப்படி வேண்டுமானாலும் நெளிந்து வளைந்து குனிந்து முட்டி போட்டு தவழும் என்பதை சுய அனுபவமாக பார்த்தாகிவிட்டது!

ஜாதிக் கட்சிகள் ஜாதிக்காக எந்த வித முன்னெடுப்புகளையும் எடுக்காது. ஜெயித்த பின் ஜாதியை ஒழிப்பது இலட்சியம் என செயல்படுவார்கள் போல!

இன உணர்வுள்ள ஒவ்வொரு வேளாளனும் இதற்கு தக்க எதிர்ப்பை தம்மளவில் காட்ட வேண்டும். இவை பொது மக்கள் பேச வேண்டும். நமது எதிர்ப்பு பலமாக நமது இன சொந்தங்களுக்கு சென்று சேர வேண்டும்.

உங்களில் ஒருவன்,

வேளாளன்

சித்திரை திருநாள்

 

சித்திரை முதல் தேதி, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது சந்திரசூரியமான மாதம்.

இந்த மேச சங்கிராந்தியில், பாரத வருஷத்தில் சூடு ஜாஸ்தியாகி பூமத்திய ரேகைக்கு வடக்கு நோக்கி, இந்து மகா சமுத்திரத்தில் காற்று பாரத வருஷத்திற்கு உள்ளே நுழையும். அது முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். அதுவே புது வருஷம் (வர்ஷம் என்றால் மழை). அதன் பின் பருவமழை ஆரம்பித்து பாரத வர்ஷம் முழுதும் பெய்யும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக வடகாற்றாக மாறி மார்கழிக்கு பின்பு மழை நின்று பங்குனியில் சுத்தமாக நின்று விடும். அதோடு அவ்வரூசம் முடிந்தது. வெள்ளாமையும் முடியும்.

பங்குனியில் வெயில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென் காற்று வடக்கே வராது. “இதனாலேயே, பங்குனியில் மழை பெய்தால் பரக்கோலம்” பழமொழியும் கொங்கு நாட்டில் உள்ளது.

ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பாரத வருஷத்திற்கே இதுதான் புது வருஷம்.

சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் வேளாளர் பண்டிகை.இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள்.பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதலில் துவங்கிவைப்பர் பிறகு கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த அழகிய கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள்.  கொங்குப் பகுதியில்(ஒரு சில இடங்களை தவிர) அருகிப் போயிருந்தாலும் பண்டைய பாரதத்தின் பிற பகுதிகளிலும்(பாரத வருஷத்தில் தென்கிழக்கு சீன உட்பட கம்போடியா, பிளிப்பன்ஸ், இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்கும்) இன்று வரை நடைபெறுகிறது.

royal ploughing ceremony

ஏன் வெளிநாடுகளில் இந்த வைபவம் நடைபெறுகிறது என்று கேள்வி எனக்கு எழுந்தது?? அதற்கான விடையும் கிடைத்தது??

  • ஜனகர் பொன்னேர் பூட்டும் பொழுது சீதாதேவி வெளியே வந்தார் சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
  • In Valmiki’s Ramayana and its Tamil version Kamban’s Ramavataram, Sita is said to have been discovered in a furrow in a ploughed field, believed to be Sita, and for that reason is regarded as a daughter of Bhūmi Devi (the goddess earth). She was discovered, adopted and brought up by Janaka, king of Mithila and his wife Sunaina

 

  • சித்திரை 1 சித்திர மேழி வைபவம் அது என்ன சித்திர மேழி வைபவம் முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல் சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும் மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும் வைபவம் = திருவிழா என்று பொருள்.
  • மழை புதிதாக ஆரம்பித்து புது வெள்ளாமை செய்ய சித்திரையில் சித்திரைமேழி உழவு அல்லது பொன்னேர் உழவு (பொன் + ஏர்) செய்து ராஜாக்கள் பாரத வருஷத்தில் உழவை ஆரம்பித்து வைப்பர். இன்றும் பாரத வர்ஷத்தின் கிழக்கு நாடுகளான கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் உள்ளது. இன்றும் கொங்கு நாட்டில்(கொல்லிமலை,பொள்ளாச்சி) , சோழதேசம் ஆகியவற்றில் புது மழையை ஒட்டி வேளாளர்கள் /வெள்ளாளர்கள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
  • சித்திரமேழிசபை என்பது சோழராட்சியில் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு. மேழி என்றால் ஏர். உழவுக்கு பயன்படும் ஏர் தான் இந்த அமைப்பின் சின்னம்.இராஜேந்திரசோழன் காலத்தில் அரசாங்கத்தின் வரிவிகிதம் போன்ற சில நடவடிக்கைகளை எதிர்த்து வேளாளர்கள் ஒன்று திரண்டு “சித்திரமேழி பெரியநாட்டார் சபை” என்ற ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டனர். அவர்களின் சின்னம் தான் சித்திரமேழி அலங்கரிக்கப்பட்ட ஏர்கலப்பை என்று பொருள்.
  • அண்ணமார் கதையில் குன்னுடையா கவுண்டர்(எங்கள் முப்பாட்டன் ) பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
  • கிபி 17-ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பு கொண்ட சித்திரமேழி
  • இளம்பூரண அடிகள் ‘கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்றார்.
  • வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த இளங்கோ அடிகள் பொன்னேரைப் பாடியது பொருத்தமே

  Image

  • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் பொ.பி 12-ஆம் நூற்றாண்டு சோழர்கால சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு!

 

Image

சங்க இலக்கியத்தில்:

 

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே” (அகநானூறு -01)

மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவான்.

 

பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி 
நல்மா மேனி தொலைதல் நோக்கி”(அகநானூறு -229)
பொன்னிறம் போன்ற பசலைகள் மேனியிலே படர்ந்தன. புள்ளிகளாகிய தேமல்களையும் வரிகளையும் உடைய நல்ல சிறந்த மேனியின் வனப்பெல்லாம் தொலைந்து போகின்றன.

 

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து,விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்“(சிலப்-135)

மிகுதியாகக் கொடிப்போல் வளர்ந்த நீண்ட அறுகம் புல்லையும்,குவளை மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து தொடுத்த மாலையினைச் சூட்டி,போற்றுவோர் வணங்கி நிற்க,நிலத்தையே பிளக்கும் வண்ணம்,ஏரைப் பூட்டி நிற்கும் உழவர் பாடும் ஏர்மங்கலப் பாடலின் ஒலி ஒருபுறம் கேட்கும்.

 

“கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” – (சிலப்.10:13:2-5)
சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, “செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க” என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார்.குவளை மலர் வேளாளர்கள் சின்னம்/அடையாளம்
“களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்”-
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர,அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

 

பொன் ஏர் மேனி மடந்தையொடு 
வென்வேல் விடலை முன்னிய சுரனே. 
(ஐங்-388)
செறிந்த தொடியையும் பொன் போன்ற அழகிய மேனியையும் உடைய மங்கையுடன்.
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே-(குறுந். 319)
பொன்னையொத்த எனது மேனியின்  நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்
“அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க் கடிகொண்டார் பெருங்கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு“-(கார் நாற்பது)

வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தழையை மாலையாகச் சூடிக்கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.

கொங்கு வேளாளர் சித்திரமேழிக்கொடி

இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு,நாட்டு மாட்டை வைத்து வேளாளர்கள் உழவு செய்ய வேண்டும்.

  • சார்வாரி வருஷ மேஷ சங்கராந்தி வாழ்த்துக்கள்.🙏