#பிஜேபிஅதிமுக சாதிஅரசியல்****# வெள்ளாளர் வேளாளர் பள்ளர்***

பாகம் :1

தற்போது நெருங்கி வரும், தமிழக சட்டசபை தேர்தல் 2021க்காக அரசியல் கட்சிகள், ஓட்டுக்காக பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்து விட்டது.

அதில் பிஜேபி கட்சியும்,அதிமுகவும் அதிரடியாக சாதி அரசியலில் இறங்கியுள்ளது.

சாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக கட்சியை வீழ்த்துவதற்காவே, பிஜேபி இம்முயற்சியை எடுத்துள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காலங்காலமாகவே பள்ளர்,குடும்பர் என்ற பெயர்களில் கல்வெட்டுகள் மூலமாக 1000வருடங்களாக அறியப்பட்ட சமூகத்தை, அந்த சமூகத்தை ஏதோ 20% இடஒதுக்கீடு கொடுப்பது போல, சுயசாதி இழிவில் இருந்து உங்களை விடுவிக்கிறேன் என பிரதமர் இவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயருடன் இனி அழைக்கப்படுவார் என அறிவித்தார்.

வேளாளர்,வெள்ளாளர் என பழங்காலமாகவே இங்கு ஒரு பெரும்பான்மையான சமுதாயம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து வாழ்ந்து வருவதை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து, பிரதமர் மோடியும், அதே வேளாளர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடியாரும் செய்திருப்பதை, அச்சமூகம் பல்வேறு எதிர்ப்புகளையும்,கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது.

இப்பெயருக்கு யார் சொந்தக்காரர்கள் என்ற விவாதத்திற்கு முன்பு இருவரின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் எவ்வளவு வாக்கு வங்கி, அதிமுகவிற்கு சாதக,பாதகத்தை கொடுக்கப் போகிறது என பார்க்கலாம்.

கிபி 1891ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில்:-

வ்வேல

பள்ளர் சமூகம்:-

அம்மா பள்ளர் – 12,991
ஆத்தா பள்ளர். – 1,05,607
அஞ்ஞா பள்ளர் – 1,00,696
அய்யா பள்ளர் – 32,391
தேவேந்திர பள்ளர் – 75,780
கடையன். – 18,830
மங்க நாட்டு பள்ளர் – 15,544
சோழிய பள்ளர் – 41,015
தொண்டை மண்டல
பள்ளர். – 49231

மொத்தம் – 4,52,085

அதே கிபி1891ல் வெள்ளாளர் சமூகம்:-

கார்காத்தார் – 1,37,245
கொடிக்கால் – 45,836
கொண்டைகட்டி – 31,012
கொங்கு – 4,19,526
பாண்டிய – 60,825
செந்தலை – 1,67,183
சோழிய – 2,24,076
தென்திசை – 2,31,371
தொண்டை மண்டல – 61,837
துளுவ – 1,91,098

மொத்தம் – 15,70,005

அடுத்ததாக கிபி1971ல் இந்திய அரசால் எடுக்கப்பட்ட தாழ்ந்தப்பட்ட சமூக கணக்கெடுப்பு மூலமாக பள்ளர் சமூகத்தின் மக்கள் தொகை :-

பள்ளர் – 12,08,833

சுமார் 90வருடங்களில் 2.7% அதிகரித்துள்ளது.

அதே விகிதத்தில் கணக்கிட்டால் வெள்ளாளர்கள்:-

மொத்த வெள்ளாளர்கள் – 42,39,013

90 வருடங்களில் 2.7% என்றால் தற்போது உள்ள 2021க்கு 3.5% மக்கள் தொகை அதிகரித்திருக்கும்.

ஆக 2021ல்
பள்ளர் – 45,30,915

வெள்ளாளர் – 1,48,08,202 பேர் இருப்பார்கள் என்பது இங்கு உத்தேச மக்கள் தொகையாக இருக்கும்.

எப்படி பார்த்தாலும் பள்ளர் சமூகத்தை விட 3மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட வெள்ளாளர் சமூகத்தின் வாக்கு வங்கி, தேவேந்திர குல வேளாளர் என்ற அரசு ஆனை மூலகமாக, அதிமுகாவை முற்றிலுமாக அனைத்து தொகுதிகளிலும் 12% வாக்கு வங்கியை உடைக்கும்.

அதேபோல் பிஜேபி பள்ளர் சமூக தலைவர் ஜான் பாண்டியனை மட்டுமே ஆதரிக்கிறது, கிருஷ்ணசாமியை கைவிட்டுள்ளது. மேலும் கிருஷ்ணசாமி பட்டியல் வெளியேற்றத்தையே கோரிக்கையாக வைக்கிறார்.

ஆக பள்ளர் சமூகத்தின் ஓட்டுக்கள் திமுக,கிருஷ்ணசாமி,அமமுக என பிரியும் ஏனென்றால் இந்த மூன்று கட்சிகளில் ஒன்றியச் செயலாளர் முதற்கொண்டு பள்ளர் சமூகம் உள்ளது. ஆக முழுமையான ஓட்டும் அதிமுகாவிற்கு விழாது.

இவ் அரசானை மூலமாக அதிமுகாவிற்கு 1% ஓட்டு கிடைப்பது கூட சந்தேகமே.

பிஜேபி ஆதரவு நிலைப்பாடை எடுத்த மாநில கட்சிகளின் பரிதாப நிலையே அதிமுகாவிற்கு 2021ல் நடக்கும் என்பதே தார்மீகம்.

குறிப்பு:-

இந்த அரசானைக்கு எதிராக வாதிரியார் மற்றும் கடையர் சமூகத்தினர் முழுமையாக போராடி வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Source:-
Census of India 1881
Dalit Census of India 1971